விண்ணப்பித்த 20 நாட்களுக்குள் ஊழியர்களின் வங்கிக் கணக்குக்கு அவர்களது தொகை மாற்றப்படும் என்று இபிஎப் அலுவலகம் தெரிவித்துள்ளது.
EPF திட்டத்தின்கீழ் வரும் நிதியை வைத்து ஒரு தொகுப்பை அமைத்து அதன்மூலம் ஊழியர்களின் ஓய்வுக்காலத்தில் தேவைப்படும் நிதியை இபிஎப் வழங்குகிறது. ஒவ்வொரு மாதமும் 12 சதவீதம் தொகையை ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து அதற்கு இணையான தொகையை நிறுவனத்திடம் இருந்து இபிஎப் பெறுகிறது. இதற்கு ஆண்டுக்கு குறிப்பிட்ட வட்டியும் தரப்படுகிறது. ஓய்வுகாலத்துக்காக இபிஎப் வசூலிக்கப்பட்டாலும் சில அவசர காலத் தேவைக்காக அந்தப்பணத்தை எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. ஓய்வு பெறும் நேரத்தில் இபிஎப் தொகையை முழுவதுமாக எடுத்துக் கொள்ளலாம். இதுதவிர பகுதியாக இந்தப் பணத்தை ஊழியர்கள் தங்கள் அவசரகால மருத்துவ உதவிக்காக எடுக்கலாம்.
சொத்து வாங்குதல், கல்விக் கட்டணம் ஆகிய காரணங்களுக்காகவும் இபிஎப் பணத்தை எடுக்கலாம். ஒருவேளை இரண்டு மாதத்துக்கு மேல் ஒரு ஊழியர் வேலை இல்லாமல் இருந்தால் இபிஎப் பணம் முழுவதையும் எடுத்துக் கொள்ளலாம். ஒருமாதம் ஆன நிலையில் 75 சதவீத பணத்தை எடுக்கலாம். இபிஎப் அமைப்பின் போர்ட்டலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற தளத்தில் உறுப்பினர் இ-சேவா பக்கத்துக்கு செல்லலாம். இபிஎப்ஓ போர்டடலில் உங்களது UAN மற்றும் பாஸ்வேர்டு என்டர் செய்து உள்ளே போகலாம். அதற்கு ஊழியர்களின் UAN எண் ஆக்டிவேட் செய்யப்படவேண்டும். ஆன்லைன் பண தரவுக்கு UAN எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் செயல்பாட்டில் இருக்க வேண்டும். ஆப்லைன் விண்ணப்பத்துக்கு நீங்கள் சம்பந்தப்பட்ட இபிஎப் அலுவலகத்துக்கு நேரில் சென்று காம்போசிட் கிளைம் பார்மை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பித்த 20 நாட்களுக்குள் ஊழியர்களின் வங்கிக் கணக்குக்கு அவர்களது தொகை மாற்றப்படும் என்று இபிஎப் அலுவலகம் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பிட்ட காலத்தில் அவர்களது பணம் வங்கிக்கு வராவிட்டால் அந்த ஊழியர் பிராந்திய பிஎப் கமிஷனர் அலுவலகத்தில் அல்லது இபிஎப் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் புகார் அளிக்கலாம். இதைத் தொடர்ந்து ஊழியர்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து ஆய்வு செய்து உடனடியாக பிரச்னைக்கு தீர்வு அளிக்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தெரியாதவர்கள் நேரடியாக பிஎப் அலுவலகத்துக்கு சென்று கிளைம் பார்மை பூர்த்தி செய்வது நல்லது. பிஎப் அலுவலகத்தின் ரிசப்ஷனில் குறைதீர்ப்பு அலுவலர்கள் இருப்பார்கள். அவர்களிடம் உங்கள் பிரச்னையைக் கூறினால் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு உதவி செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.