EPFO 3.0 அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளர்.
ஹைதராபாத்தில் EPFO -இன் தெலுங்கானா மண்டல அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, EPFO 3.0 அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் இனி வருங்கால வைப்பு நிதி கணக்கை வங்கிக் கணக்கு போல் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறினார்.
வங்கியில் இருந்து பணம் எடுப்பதுபோல, ஏடிஎம்மை பயன்படுத்தி நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பி.எஃப் தொகையை எடுத்துக் கொள்ள முடியும். இனி EPFO அலுவலகத்தையோ, அது சார்ந்த ஊழியர்களையோ நீங்கள் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார். இது உங்கள் பணம், நீங்கள் விரும்பும் போதெல்லாம் அதை எடுக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நீங்கள் வேலையில் இருக்கும் போது PF நிதியை ஓரளவு அல்லது முழுமையாக திரும்பப் பெற உங்களுக்கு அனுமதி இல்லை. நீங்கள் குறைந்தது ஒரு மாதமாவது வேலையில்லாமல் இருந்தால், உங்கள் PF இருப்பில் 75% வரை நீங்கள் திரும்பப் பெறலாம். இரண்டு மாத வேலையின்மைக்குப் பிறகு, முழுத் தொகையையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
எந்த ஒரு ஊழியரும் நிறுவனத்தில் 5 வருட சேவையை முடித்துவிட்டு PF திரும்பப் பெற்றால், அவருக்கு வருமான வரிப் பொறுப்பு இல்லை. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களை இணைப்பதன் மூலமும் ஐந்து வருட காலம் இருக்கலாம். ஒரே நிறுவனத்தில் ஐந்தாண்டுகளை முடிக்க வேண்டிய அவசியமில்லை. மொத்த பதவிக்காலம் குறைந்தது 5 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
Read More : பத்திரப்பதிவு செய்வோருக்கு செம குட் நியூஸ்..!! நாளை மிஸ் பண்ணிடாதீங்க..!! வெளியான அறிவிப்பு..!!