fbpx

ஓபிஎஸ்-ஐ நீக்கிய இபிஎஸ்.. இபிஎஸ்-ஐ நீக்கிய ஓபிஎஸ்… அதிமுகவில் அடுத்தடுத்த ட்விஸ்ட்

அதிமுக பொதுக்குழு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ள நிலையில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. மேலும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்க வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.. இதை தொடர்ந்து அதிமுக கட்சி விதிகள், கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.. அதன்படி கட்சி பொருளாளர், கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.. எனவே ஓ. பன்னீர்செல்வம், ஆர். வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர்..

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்குவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட நிலையில், இபிஎஸ்-ஐ நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ அதிமுக சட்ட விதிகளின் படி, ஒன்றரை கோடி தொண்டர்கள் கழக ஒருங்கிணைப்பாளராக என்னை தேர்ந்தெடுத்துள்ளனர்.. என்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கோ, கே.பி. முனுசாமிக்கோ அதிகாரம் இல்லை.. ஆனால், எடப்பாடி பழனிசாமியையும், கே.பி. முனுசாமியையும் கழக சட்ட விதிக்கு புறம்பாக செயல்பட்டதால், இருவரையும் கழகத்தின் அடிப்பை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நான் நீக்குவதாக அறிவிக்கிறேன்..” என்று தெரிவித்தார்..

மேலும் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தன்னை கட்சியை விட்டு நீக்கியதற்கு எதிராக நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு செல்வோம் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்..

Maha

Next Post

“ ஸ்டாலின் மக்களை பற்றி கவலைப்படவில்லை.. குடும்ப ஆட்சி நடத்துகிறார்..” இபிஎஸ் குற்றச்சாட்டு...

Mon Jul 11 , 2022
அதிமுக பொதுக்குழு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ள நிலையில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. மேலும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. இதை தொடர்ந்து அதிமுக கட்சி விதிகள், கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் […]

You May Like