fbpx

தொடர் தோல்வி.. அதிமுக நிர்வாகிகளுடன் இன்று முதல் 9 நாட்கள் EPS ஆலோசனை!!

பாராளுமன்ற தொகுதி வாரியாக கட்சியினர் மாவட்ட செயலாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் 9 நாட்கள் ஆலோசனை நடத்த உள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக-வுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை எதிர்கொண்ட அதிமுக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. குறிப்பாக தென்சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, வேலூர், தேனி, ராமநாதபுரம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் டெப்பாசிட்டை இழந்தது.

இந்நிலையில்,  தேர்தல் முடிவுகள் குறித்து நாடாளுமன்றத் தொகுதி வாரியாக கழக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் 10.7.2024 முதல் 19.7.2024 வரை, ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று மாலை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த முக்கிய பொறுப் பாளர்கள் பங்கேற்கிறார்கள். அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி தேர்தல் தோல்வி பற்றி ஆலோசனை நடத்துகிறார்.

11ம் தேதி சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை 12ம் தேதி அரக்கோணம், தஞ்சாவூர், திருச்சி 13ம் தேதி சிதம்பரம், மதுரை, பெரம்பலூர் 15ம் தேதி நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி 16ம் தேதி ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர் 17ம் தேதி தென்காசி, தேனி, திண்டுக்கல் 18ம் தேதி பொள்ளாச்சி, நீலகிரி, கோயம்புத்தூர் 19ம் தேதி விழுப்புரம், கன்னியாகுமரி, ஆரணி ஆகிய மாவட்டங்களில் ஆலோசனை ஆலோசனை நடத்த உள்ளார்.

English Summary

EPS intense consultation with AIADMK executives for 9 days from today

Next Post

தெரிந்தே சாராயம் குடித்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கும் போது.. அப்பாவி மனுதாரருக்கு ஏன் வழங்க கூடாது? - நீதிபதி சரமாரி கேள்வி

Wed Jul 10 , 2024
The Madurai branch of the High Court has ordered a compensation of Rs 10 lakh to the family of a mosquito control worker who died in a fire while burning medical waste in a government hospital.

You May Like