fbpx

ஈரோடு இடைத்தேர்தல்..!! டெபாசிட்டை தக்க வைத்த அதிமுக..!! நிம்மதியில் எடப்பாடி பழனிசாமி..!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா உட்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 74.79 சதவிகித வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. மொத்தம் பதிவான 398 தபால் வாக்குகளில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 250 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு 104 வாக்குகளும், நாம் தமிழர் கட்சிக்கு 10 வாக்குகளும், தேமுதிக வேட்பாளருக்கு ஒரு வாக்கும் கிடைத்தன. அதன்பிறகு மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகளில் முதல் சுற்று தொடங்கியது முதலே ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

தற்போதைய நிலவரப்படி, ஈவிகேஎஸ் இளங்கோவன் 76,834 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 28,637 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா 4,830 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் மிகச் சொற்பமாக 606 வாக்குகளும் பெற்றுள்ளனர். மொத்தம் பதிவான வாக்குகளில் 6இல் ஒரு பங்கு வாக்குகளுக்கு மேல் பெற்றதன் மூலம் அதிமுக வேட்பாளர் தென்னரசு டெபாசிட்டைத் தக்கவைத்தார். அவரைத் தவிர மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர். சட்டமன்ற பொதுத்தேர்தலில் சுமார் 8,000 அளவிலான வாக்கு வித்தியாசத்திலேயே திருமகன் ஈவேரா வெற்றி பெற்றிருந்தார். தற்போது, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவரது வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளார்.

Chella

Next Post

"அய்யோ.... இப்படி பண்றீங்களே..." தெரு நாய்யை பிடித்து பாலியல் பலாத்காரம் செய்த நபர்! காவல்துறை வலைவீச்சு !

Thu Mar 2 , 2023
நாட்டில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தான் பாதுகாப்பு இல்லை என்று நினைத்திருந்தால் தற்போது நாட்டில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால் விலங்குகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிலவுகிறது. டெல்லியைச் சார்ந்த தெரு நாய் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது நாட்டை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. டெல்லியின் ஹரி நகர் பகுதியில் இச்சம்பவம் நடந்திருக்கிறது. பகுதியில் இருக்கக்கூடிய பூங்கா ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தெரு நாய் ஒன்றைப் பிடித்து பாலியல் பலாத்காரம் […]

You May Like