fbpx

ஈரோடு இடைத்தேர்தல்..!! நேரடியாக போட்டியிடும் பாஜக..? அண்ணாமலை அதிரடி உத்தரவு..!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகளை கவனிக்க மாநில அளவில் குழுவை அமைத்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கும் வந்தது. இந்நிலையில், இந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜகவும் நேரடியாக போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு இடைத்தேர்தல்..!! நேரடியாக போட்டியிடும் பாஜக..? அண்ணாமலை அதிரடி உத்தரவு..!!

இந்நிலையில், தேர்தல் பணிகளை முழுமையாக கவனிக்கவும், ஒருங்கிணைக்கவும் பாஜக சார்பில் மாநில அளவில் குழு அமைத்து அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் மாவட்ட தலைவர், ஈரோடு தெற்கு V.C.வேதானந்தம், Dr..C.சரஸ்வதி MLA முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர், N.P.பழனிசாமி தேசிய பொதுக்குழு உறுப்பினர், S.A.சிவசுப்ரமணியம் மாவட்ட பார்வையாளர் உள்ளிட்ட 14 பேர் இடம் பெற்றுள்ளனர். மாநிலத் தலைவர் அண்ணாமலை விரைவில் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Chella

Next Post

இந்து சமய அறநிலையத் துறையில் 35-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்...! உடனே விண்ணப்பிக்கவும்...!

Thu Jan 19 , 2023
இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள Zonal & Assistant Sthapathis பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என 40 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 41 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor of Technical in […]

You May Like