ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவளிக்கும் என்று அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் இந்த இடைத்தேர்தலில் ஆதரவு தரக்கோரி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இளங்கோவன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார்.. கமல்ஹாசன் கட்சியினருடன் ஆலோசித்து தனது முடிவை அறிவிப்பதாக கூறியிருந்தார்.. இந்த இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாக களமிறமிறங்க வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.. மேலும் இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க அதிக வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது..
இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.. தனது நண்பரும், பெரியாரின் பேரனுமான காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரிப்பதாகவும் கமல் கூறியுள்ளார்.. மேலும் “ அவரின் வெற்றிக்காக நானும் எனது கட்சியினரும் உறுதுணையாக இருப்போம்.. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது, இப்போது அதுபற்றி தெரிவிக்க இயலாது..” என்றும் கமல் தெரிவித்துள்ளார்..