fbpx

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் எப்போது..? தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்..!!

மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகலாந்தில் மார்ச் 12ஆம் தேதியும், மேகாலயாவில் மார்ச் 15ஆம் தேதியும், திரிபுராவில் மார்ச் 22ஆம் தேதியுடன் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில், அந்த 3 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திரிபுராவில் பிப்ரவரி 16ஆம் தேதியும், நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் பிப்ரவரி 27ஆம் தேதியும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மார்ச் 2ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் எப்போது..? தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்..!!

மேலும், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜனவரி 31ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் பிப்ரவரி 7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரி 8ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்றும் வேட்பு மனுவை வாபஸ் பெற பிப்ரவரி 10ஆம் தேதி கடைசி நாள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

தூய்மை பணியாளரை அடித்துக் கொலை செய்த நண்பர்….!

Wed Jan 18 , 2023
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் தனியார் பள்ளியில் ஓட்டுநராக பணியாற்றி வருபவர் சோஹில் சுபேதார் சிங், இவருடைய நண்பர் ரமேஷ் சந்திர உபாத்யாய். ரமேஷ் சந்திர உபாத்யாய் ஒரு தனியார் பள்ளியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகின்றார். சுபேதாருடன் இவர் அறை எடுத்து தங்கி வந்தார். மேலும் இரவில் தாமதமாக வரும் சுபேதார் அறை கதவை திறக்க வேண்டும் என்று சொல்லி பலமாக தத்தியதாகவும் மிகப்பெரிய சத்தத்துடன் கதவை மூடியதாகவும் […]

You May Like