fbpx

ஜஸ்ட் மிஸ்!… தப்பித்த திருமா!… நள்ளிரவு வரை ஐடி சோதனை!… வெறும் கையோடு திரும்பிய அதிகாரிகள்!

Thiruma: விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையின் முடிவில் எதையும் கைப்பற்றவில்லை என அக்கட்சி விளக்கமளித்துள்ளது.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரப்பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். திமுக கூட்டணியில் இணைந்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், அவர் தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சிதம்பரம் புறவழிச்சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், திமுக கூட்டணி வேட்பாளருமான தொல்.திருமாவளவன், சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள நடேசன் நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், நேற்று 5 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் மாலை 6:30 மணியளவில் திடீரெ சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் வீட்டின் உரிமையாளர் இன்று மதியம் வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அளித்துவிட்டுச் சென்றனர். இது அக்கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், நேற்று நள்ளிரவு வரை நடத்திய வருமான வரித்துறை சோதனையில், அதிகாரிகள் பணம் உள்ளிட்ட எதையும் கைப்பற்றவில்லை என்று அக்கட்சி விளக்கமளித்துள்ளது.

Readmore: PFI உதவியுடன் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி…! மத்திய அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு…!

Kokila

Next Post

Tomato Price: இல்லத்தரசிகளுக்கு ஷாக்... உச்சத்திற்கு சென்ற தக்காளி விலை...!

Wed Apr 10 , 2024
விளைச்சல் குறைவால் தக்காளி ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் தக்காளியில் நோய் தாக்கம் மற்றும் வரத்து குறைவால், தக்காளியின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. கடந்த 2 மாதங்களாக தக்காளி ரூ.10 முதல் ரூ.20 வரை மட்டுமே விற்பனையானது. தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக போதிய தண்ணீர் இல்லாததால் தக்காளி மகசூல் குறையதொடங்கி உள்ளது. இதனால் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைவால் கடந்த […]

You May Like