fbpx

‘அதானி கைக்கு வந்தது எஸ்ஸார் டிரான்ஸ்கோ..!!’ நெக்ஸ்ட் பிளான் என்ன?

ஜிஎஸ்டி விதிமீறல்..!! அதானி குழுமத்திற்குள் அதிரடியாக நுழைந்த அதிகாரிகள்..!! திடீர் ரெய்டு..!!

அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம், எஸ்ஸார் டிரான்ஸ்கோ நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்குத் தேவையான துறைகளில் தொடர்ந்து அதிகப்படியான தொகையை முதலீடு செய்து வருகிறார். ஏற்கனவே இருக்கும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதைத் தாண்டி போட்டி நிறுவனங்களையும், இத்துறை சார்ந்த நிறுவனங்களையும் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

அந்த வகையில், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம், எஸ்ஸார் டிரான்ஸ்கோ நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்தி உள்ளது. இந்த கையகப்படுத்தல் காரணமாக, அதானி ட்ரான்ஸ்மிஷன் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் கவனம் பெற்று வருகின்றன.

கடந்த மே 15 ஆம் தேதியோடு, எஸ்ஸார் டிரான்ஸ்கோ லிமிடெட் நிறுவனத்தின் 100% பங்குகளை அதானி குழுமம் வாங்கி உள்ளது. இதன் மூலம், அதானி குழுமத்திற்கு கீழ் உள்ள பரிமாற்ற பரப்பளவு 21182 ckt கிலோமீட்டர்களாக உயர்ந்துள்ளது. அதன்படி, இந்த கையகப்படுத்தல் அதானி குழுமத்தின் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு மிகப்பெரிய படிக்கல்லாக அமைந்துள்ளது.

வெறும் 15 நிமிடங்கள் சார்ஜ்..!! அசத்தும் மின்சார ஆட்டோ..!! வாங்கப்போறீங்களா..? விலையை தெரிஞ்சிக்கோங்க..!!

Next Post

பிரிட்டனின் ASOS உடன் பார்ட்னர்ஷிப் அமைக்கும் ரிலையன்ஸ்!

Fri May 17 , 2024
சில்லறை வர்த்தகத்தில் உலகத் தரம் வாய்ந்த ஃபேஷன் ஆடைகள் மற்றும் பயன்பாட்டு பொருட்களை இந்தியர்களுக்கு வழங்கும் முயற்சியாக இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ், பிரிட்டனின் ASOS நிறுவனத்துடன் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த ASOS நிறுவனம் 900 உலகளாவிய மற்றும் உள்ளூர் பிராண்டுகளின் ஆயிரக்கணக்கான தயாரிப்புகளின் தொகுக்கப்பட்ட திருத்தத்தையும், அதன் பயன்பாடு மற்றும் இணையதளம் வழியாக 200 க்கும் மேற்பட்ட சந்தைகளில் ஃபேஷன் தலைமையிலான சொந்த பிராண்ட் லேபிள்களையும் வழங்குகிறது. […]

You May Like