fbpx

யூரோ 2024: கடைசி நிமிடம் வரை த்ரில்!. டிராவில் முடிந்த 2 ஆட்டங்கள்!. புள்ளி பட்டியலில் அடுத்தடுத்த இங்களை பிடித்த அணிகள்!.

Euro 2024: ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் இங்கிலாந்து – டென்மார்க், சுலோவீனியா – செர்பியா அணிகளுக்கிடையிலான லீக் ஆட்டங்கள் டிராவில் முடிந்ததையடுத்து, புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்து அசத்தியுள்ளன.

ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் ஜெர்மனியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நேற்று பிராங்க்பர்ட் நகரில் நடந்த ‘யூரோ’ கோப்பை கால்பந்து ‘சி’ பிரிவு லீக் போட்டியில் உலகின் ‘நம்பர்-5’ இங்கிலாந்து அணி, 21வது இடத்தில் உள்ள டென்மார்க் அணியை சந்தித்தது. இங்கிலாந்து அணிக்கு 18வது நிமிடத்தில் ஹாரி கேன் ஒரு கோல் அடித்தார். இதற்கு 34வது நிமிடத்தில் டென்மார்க்கின் மோர்டன் ஹுல்மண்ட் பதிலடி கொடுத்தார். முதல் பாதி முடிவில் போட்டி 1-1 என சமநிலை வகித்திருந்தது.

இரண்டாவது பாதியில் கடைசி நிமிடம் வரை போராடிய இரு அணி வீரர்களால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. ஒரு வெற்றி, ஒரு ‘டிரா’ என 4 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது. அடுத்த இரு இடங்களில் (தலா 2 புள்ளி) டென்மார்க், சுலோவேனியா உள்ளன.

இதேபோல், மற்றொரு ஆட்டத்தில் செர்பியா, சுலோவேனியா மோதிய யூரோ கோப்பை கால்பந்து லீக் போட்டி, கடைசி நேரத்தில் ‘டிரா’ ஆனது. ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடக்கிறது. நேற்று நடந்த ‘சி’ பிரிவு லீக் போட்டியில் ‘பிபா’ தரவரிசையில் 32 வது இடத்திலுள்ள செர்பியா, 57 வது இடத்திலுள்ள சுலோவேனிய அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

இரண்டாவது பாதியில், போட்டியின் 69 வது நிமிடத்தில் சுலோவேனியாவின் டிமி மேக்ஸ் எல்ஸ்னிக் பந்தை சக வீரர் ஜான் கார்னிக்னிக்கிற்கு ‘பாஸ்’ செய்தார். இதைப் பெற்ற ஜான், வலது காலால் உதைத்து கோல் அடித்து அசத்தினார். இரண்டாவது பாதியில் ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில், போட்டி முடிய 2 நிமிடம் இருந்த போது, செர்பிய வீரர் இவான் லிக், பந்தை சுலோவேனிய கோல் ஏரியாவுக்குள் அடித்தார். இதை, அங்கிருந்த லுகா ஜோவிச், தலையால் முட்டி கோலாக மாற்றினார். முடிவில் போட்டி 1-1 என ‘டிரா’ ஆனது.

Readmore: சாப்பிடும் உணவில் அடிக்கடி முடி இருந்தால் என்ன காரணம்..? ஜோதிடம் சொல்வது என்ன..?

English Summary

england-denmark Matches ended in a draw

Kokila

Next Post

மகிழ்ச்சி...! கரும்பு விவசாயிகளுக்கு ரூ.12,500 மானியம்... 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்...!

Fri Jun 21 , 2024
Rs.12,500 subsidy for sugarcane farmers...can apply till 30th

You May Like