இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமான இசையமைப்பாளர் தான் ஏ.ஆர். ரஹ்மான். இவர் தனது இசையால் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
ஏ.ஆர் ரஹ்மான் கடந்த 1995-ம் ஆண்டு சாய்ரா பானுவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கதீஜா, ரஹ்மான் என்ற மகள்களும் அமீன் என்ற மகளும் இருக்கிறார். 29 ஆண்டுகள் ரஹ்மானும் சாய்ராவும் தங்கள் திருமண வாழ்க்கையை அமைதியாக நடத்தி வந்தனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரஹ்மானை விவாகரத்து செய்யப்போவதாக அவரின் மனைவி சாய்ரா அறிவித்திருந்தார்.. இந்த அறிவிப்பு திரைத்துறையினர் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் மூலம் ரஹ்மான் – சாய்ராவின் 29 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இதுகுறித்து ஏ.ஆர் ரஹ்மானும் உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் செய்த உதவிக்கு தான் நன்றி கடன்பட்டுள்ளதாக அவரின் மனைவி சாயிரா தெரிவித்துள்ளார். சாயிரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ ஏ.ஆர். ரஹ்மானின் முன்னாள் மனைவி சாய்ரா ரஹ்மான் சமீபத்தில் மருத்துவ அவசரநிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. இசையமைப்பாளர், ஒலி வடிவமைப்பாளர் ரெசுல் பூக்குட்டி மற்றும் அவரது மனைவி ஷாடியா ஆகியோரின் ஆதரவுக்கு நன்றி.
இந்த சவாலான நேரத்தில், விரைவாக குணமடைவதில் மட்டுமே சாயிராவின் முழு கவனமும் உள்ளது. தன்னைச் சுற்றியுள்ளவர்களின் அக்கறை மற்றும் ஆதரவை அவர் மிகவும் பாராட்டுகிறார். தனது ஏராளமான நலம் விரும்பிகள் மற்றும் ஆதரவாளர்களிடமிருந்து அவரது நல்வாழ்வுக்காக பிரார்த்தனைகளை கோருகிறார்.” என்று தெரிவித்துள்ளார்
ரஹ்மானுக்கும் நண்பர்களுக்கும் சாயிரா நன்றி தெரிவித்ததாகவும் வந்தனா குறிப்பிட்டுள்ளார். மேலும், “இந்த கடினமான நேரத்தில் அசைக்க முடியாத ஆதரவை வழங்கிய லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த தனது நண்பர்களான ரெசுல் பூக்குட்டி மற்றும் அவரது மனைவி ஷாடியா, வந்தனா ஷா மற்றும் ரஹ்மான் ஆகியோருக்கும் திருமதி சாய்ரா ரஹ்மான் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார். அவர்களின் கருணை மற்றும் ஊக்கத்திற்கு அவர் உண்மையிலேயே நன்றியுள்ளவராக இருக்கிறார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும்”சாய்ரா ரஹ்மான் இந்த காலகட்டத்தில் தனியுரிமையை விரும்புகிறார், மேலும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் புரிதலுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்” என்று வந்தனா ஷா தெரிவித்துள்ளார்.
Read More : அட்லீ – அல்லு அர்ஜுன் படத்தை மிஸ் பண்ண அனிருத்.. இளம் இசையமைப்பாளருக்கு அடித்த ஜாக்பாட்..!