fbpx

ரத்தத்தை கூட ஆய்வகத்தில் தயாரிக்கலாம்… நிரூபித்த பிரிட்டன்!!

பல உயிர்களைக் காப்பாற்றும் ரத்தத்தை இனி ஆய்வகத்தில் தயாரித்து அவசர காலத்திற்கு மனிதர்களுக்கு பயன்படுத்தலாம் என்று பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஸ்டெம் செல்களை பயன்படுத்தி ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வது பற்றிய செயல்முறை திட்டத்தை கண்டுபிடித்துள்ளனர். உலகில் உள்ள எத்தனையோ கோடி பேர் சரியான நேரத்தில் உரிய ரத்தம் கிடைக்காமல் உயிரை மாய்க்கின்றனர். எத்தனையோ கோடி பேர் அரிய வகை குரூப் ரத்தத் தேவையால் இறக்கின்றனர். அப்படிப்பட்டவர்களை மனதில் கொண்டு இந்த ஆராய்ச்சி தொடங்கப்பட்டது.

தற்போது இந்த ரத்த சிவப்பணுக்களை மருத்துவ பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட ரத்த சிவப்பணுக்களை இரண்டு தன்னார்வலர்களுக்கு செலுத்தியுள்ளனர்.

சாதாரண மக்களிடம் இருந்து பெறப்படும் ரத்த சிவப்பணுக்களுடன் ஒப்பிடும்போது, ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட சிவப்பணுக்கள் நீண்ட காலம் உயிர்வாழும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அதற்கு காரணம் நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்படும் ரத்தத்திலும் வயதான செல்களும் இறந்த செல்களும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

எனவே ரத்தத்தை அடிக்கடி மாற்ற வேண்டியுள்ளது.அரிதான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ரத்த அணுக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Next Post

9 மாவட்டங்களில் ரெய்டு… போலிவங்கிகளில் ரூ.56 லட்சம் பணம் பறிமுதல்.. அதிரடி!!

Tue Nov 8 , 2022
போலி வங்கிகள் நடத்தி வந்த இடங்களில்சோதனை செய்து ரூ.56 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் கூறியுள்ளார். சென்னை உள்பட 9 மாவட்டங்களில்   போலி வங்கிகள் செயல்பட்டு வந்தது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதுகுறுத்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி லிமிடெட் என்ற பெயரில் 9 இடங்களில் போலி வங்கி நடத்தி மோசடி செய்துள்ளதாக தெரிவித்தார்.   நிஜ […]

You May Like