ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தை சேர்ந்தவர் முகுந்த் (55). இவரது நெருங்கிய நண்பர் வீட்டிற்கு முகுந்த் அடிக்கடி சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அப்போது, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வழக்கம்போல நண்பரின் வீட்டிற்கு முகுந்த் சென்றுள்ளார். அப்போது, அவரது மனைவி குளித்துக் கொண்டிருந்ததை அறிந்த முகுந்த், தனது செல்போனில் அதை வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர், அந்த வீடியோவை காட்டி, நண்பனின் மனைவியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும், முகுந்தும் நண்பனின் மனைவியும் உலாசமாக இருந்ததையும் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, தனது நண்பருடனும் உல்லாசமாக இருக்க வேண்டும் என மிரட்டியுள்ளார். முதலில் மறுத்த அந்த பெண், வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக முகுந்த் மிரட்டியதால், வேறு வழியின்றி சம்மதித்துள்ளார்.
இவ்வாறு, 12-க்கும் மேற்பட்ட முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பெண்ணின் கணவர் வேலைக்கு சென்றதும், இவர்கள் வீட்டிற்கு வந்து அவருடன் உல்லாசமாக இருந்துள்ளனர். மேலும், தினமும் தான் சொல்லும் நபர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று முகுந்த் வற்புறுத்தியுள்ளார். இதனால், முகுந்தின் டார்ச்சர் நாளுக்கு நாள் அதிகரித்ததால், மன வேதனை அடைந்த பெண், தனது கணவரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார்.
இதையடுத்து, தனது மனைவியை அழைத்துக் கொண்டு காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி, முகுந்த் என்ற பாபியை அதிரடியாக கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.