fbpx

’கூடா நட்பு கேடு விளைவிக்கும்’..!! லொள்ளு சபா ஆண்டனியின் பரிதாப நிலை..!! சந்தானம் சொல்லியும் கேட்கல..!!

லொள்ளு சபா சேஷு சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. நடிகர் சந்தானம் உள்ளிட்ட லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்த பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். சமீபத்தில் லொள்ளு சபா நடிகர்களை அழைத்து 20-வது வருட கொண்டாட்டம் ஒன்று நடைபெற்றது. அதில், ஒரு சிலர் மட்டும் கலந்துக் கொள்ளவில்லை. அவர்கள் இப்போ என்ன செய்யுறாங்க என தேடி அலைந்த நிலையில், லொள்ளு சபா ஆண்டனி என்பவர் உடல் முழுக்க நோயுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்துமா நோய் ஏற்பட்டு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார் ஆண்டனி. அவருக்கு காலில் வெரிகோஸ் நோய் உள்ளதால் கால்கள் வீங்கி கிடக்கின்றன. நின்றுக் கொண்டே தான் தூங்கும் நிலைமை ஏற்பட்டது என்றும் படுத்து தூங்கினால் நெஞ்செல்லாம் அடைக்கிற மாதிரி இறுக்கமாக இருக்கும் என்றார். நின்றுக் கொண்டே தூங்கியதன் விளைவாக பிளாடர் வீங்கி விட்டதாக அவர் சொல்லும் போதே கேட்பவர்கள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அந்தளவுக்கு அவரது நிலைமை படுமோசமாக உள்ளது.

நல்லா சம்பாதித்து சினிமாவில் சாதிக்க நினைத்தவருக்கு தீய நண்பர்களின் சகவாசத்தால் பிசினஸ் எல்லாம் பண்ணி லாஸ் ஆன நிலையில், பல கெட்டப்பழக்கங்களுக்கு ஆளாகி இப்படி ஆகி விட்டேன் எனக் கூறியுள்ளார். நடிகர் சந்தானம் தான் தன்னை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கான உதவிகளை செய்து வருகிறார் என்றும் அப்போதே ஆபிஸ் வா தேவையில்லாத நபர்களுடன் சேர வேண்டாம் என சந்தானம் எச்சரித்தார். ஆனால், நான் தான் கேட்கல என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

லொள்ளு சபா ஆண்டனி இப்படி இருக்கும் நிலையில், அவரது மனைவி வந்து பார்க்கக் கூட இல்லை என்றும் இருவரும் பிரிந்து விட்டதாக கூறியுள்ளார். யாருக்கும் இதுபோன்ற நிலைமை வரக் கூடாது என்றும் கூடா நட்பு கேடு விளைவிக்கும் என்பதையும் லொள்ளு சபா அண்டனியின் துயரங்கள் மற்றவர்களுக்கு பாடமாக மாறியுள்ளது.

Read More : JEE முதன்மை தேர்வுக்கான நுழைவு சீட்டு வெளியீடு..!! தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Chella

Next Post

பெண்களுக்கு அவசியமான கால்சியம் சத்து ! எந்த உணவில் அதிகம் தெரியுமா?

Thu Apr 4 , 2024
உலகளவில் ஆண்களை காட்டிலும், பெண்கள்தான் கால்சியம் சத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.  நமது உடலில் கால்சியம் சத்து குறைந்து விட்டால் முதுகு வலி, மூட்டு வலி, எலும்பு அரிப்பு, நகம், பற்கள் என பாதிப்புகள் உருவாகும். அஜீரணக்கோளாறு, வாயுத்தொல்லை ஆகிய பிரச்சனைகள் இருப்பவர்களுக்கும் கால்சியம் குறைபாடு இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. கால்சியம் சத்து தசையை இயக்குவதற்கும், நரம்பு மண்டலம் செய்தியை மூளைக்கு எடுத்துச் செல்வதற்கும் அவசியம். குறிப்பாக, பருப்புகள், சோயாபீன்ஸ், கொண்டைக்கடலை […]

You May Like