fbpx

ஒரு பெண் கணவர் வீட்டில் வசித்தாலும் தனது பெற்றோர் வீட்டில் வசிக்கும் உரிமையை பறிக்க முடியாது..!! ஐகோர்ட் அதிரடி..!!

ஒரு திருமணமான பெண் தனது கணவனின் வீட்டில் வசித்தாலும், பெற்றோரின் வீட்டில் வசிக்கும் உரிமையை மறுத்ததாகக் கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கிராம ஊராட்சி செயலாளர் பதவிக்கு, ஜி.மாயக்கண்ணன், பி.சரண்யா ஆகியோர் விண்ணப்பித்தனர். இவர்களில் சரண்யாவுக்கு ஊராட்சி செயலாளர் பணி வழங்கப்பட்டது. இதையடுத்து, ஜி.மாயக்கண்ணன், சரண்யா குறிப்பிட்ட பஞ்சாயத்தில் வசிப்பவர் அல்ல என்றும், தவறான தகவல் மூலம் பதவியைப் பெற்றுள்ளதாகவும் கூறி வழக்கு தொடர்ந்தார்.

அதாவது, ஊராட்சி செயலாளர் பணி நியமனத்திற்கான நிபந்தனைகளில் வேட்பாளர் உள்ளூர் வாசியாக இருக்க வேண்டும் என்பதும் விதி. ஆனால், சரண்யா தனது திருமணத்திற்குப் பிறகு தனது வீட்டை கணவரின் வீட்டிற்குச் சென்றுவிட்டார். ஆகையால், அவரை தகுதியான வேட்பாளராகக் கருத முடியாது என மாயக்கண்ணன் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா தலைமையிலான அமர்வு, “சாதாரணமாக ஒரு திருமணமான பெண் தனது கணவனின் வீட்டில் வசித்தாலும், பெற்றோரின் வீட்டில் வசிக்கும் உரிமையை மறுத்ததாகக் கருத முடியாது. திருமணத்திற்குப் பிறகு தனி ரேஷன் கார்டு பெறுவதற்காக, அவரது பெற்றோரின் ரேஷன் கார்டில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டு, கணவரின் ரேஷன் கார்டில் சேர்க்கப்பட்டிருக்கும்.

அதை வைத்து மட்டும் ஒரு திருமணமான பெண் தன் பெற்றோரின் விசிப்பிடத்துடனான உறவைத் துண்டித்துவிட்டார் என்று சொல்லிவிட முடியாது. அவருடைய பெற்றோர் வீட்டைப் பொறுத்தமட்டில் அவரது குடியிருப்பு நிலை ஒருமுறை மூடப்படும் நிலைக்கு வந்துவிட்டது. திருமண விதிகள் ஒரு பெண்ணுக்கு அத்தகைய நிபந்தனைகளை விதிக்கவில்லை” எனத் தெரிவித்தது.

மேலும், இன்றைய உலகில், ஆண்களும் பெண்களும் கல்வி அல்லது தொழில் நிமித்தம் பல இடங்களுக்குச் சென்று வருகின்றனர். ஆனால், இன்னும் தங்கள் சொந்த இடத்தை நிரந்தர வசிப்பிடமாகக் கருதுகின்றனர். ஒரு பெண்ணின் விருப்பமே அவர் அதற்குரிய குடியிருப்புச் சான்றிதழைப் பெற போதுமானது என்று நீதிமன்றம் கூறியது. திருமணமான பெண் தன் சொந்த ஊரை முற்றிலுமாக கைவிட்டு, கணவனின் இடத்தையே தன் வசிப்பிடமாக கருதுகிறார் என்ற கருத்து உள்ளது.

ஒரு திருமணமான பெண் தனது வேலை, வணிகம் அல்லது வேறு காரணங்களுக்காக தனது பிறந்த வீட்டிற்கும் திருமண வீட்டிற்கும் இடையில் எந்த இடத்தை வசிப்பிடமாக தேர்வு செய்தாலும், அவரது விருப்பத்தைப் பயன்படுத்துவதை எதுவும் தடுக்க முடியாது” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

வெளுத்து வாங்கும் கனமழை..!! 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!! குஷியில் மாணவர்கள்..!!

Thu Nov 23 , 2023
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, […]

You May Like