fbpx

கோவையில் ஸ்டாலினே வந்து முகாமிட்டாலும், சரித்திர ஓட்டு வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெறும்!… Annamalai விளாசல்!

Annamalai: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலினே வந்து முகாமிட்டாலும், சரித்திர ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜ.,வெற்றி பெறும் என்று பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை லோக்சபா தொகுதியை பொறுத்தவரை மூன்று வேட்பாளர்களுக்கும், மூன்று கட்சியினருக்கும் இடையே போட்டி அல்ல. 70 ஆண்டுகளாக தமிழகத்தில் நடக்கும் அதர்மத்துக்கும் தர்மத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல். தமிழகத்தில் பணமழை இங்கே பொழியும், இலவசங்கள் அள்ளித் தெளிக்கப்படும். கோவையில் முதலமைச்சரே வந்து முகாமிட்டாலும், சரித்திர ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜ.,வெற்றி பெறும். தமிழகத்தின் அரசியல் மாற்றம், வளர்ச்சி கோவையிலிருந்து துவங்க வேண்டும். மோடி பிரதமராகும்போது, சர்வதேச வரைபடத்தில் கோவையை பதிக்க போகிறோம்.

தமிழகத்தில் பா.ஜ., போட்டியிடும் எல்லா தொகுதிகளிலும், கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வென்று, ஜூன் 4ல் சரித்திரம் படைக்கும். இப்போதும் சொல்கிறேன், டெல்லி அரசியலில் விருப்பம் இல்லை; தமிழக அரசியலில் தொடர்ந்து இருப்பேன். மோடி போட்டியிட உத்தரவிட்டுள்ளார். அவருடைய உத்தரவை மதிக்கிறேன். தமிழ்நாட்டில் வளர்ச்சி எல்லா இடத்திலும் வர வேண்டும். ஓராண்டில், இரண்டு ஆண்டில் என்ன வளர்ச்சி என்பதை காட்ட வேண்டும்.

கோவை லோக்சபா தொகுதியில் எல்லா அமைச்சர்களும் இங்கே இருப்பார்கள், பணத்தை கொண்டு வருவார்கள். நுாற்றுக் கணக்கான கோடியை இங்கே செலவு செய்வார்கள். அண்ணாமலை இன்று சொல்கிறேன்; ஓட்டுக்கு ஒரு ரூபாய் அண்ணாமலை தரமாட்டேன். மக்களை நம்பி கோவையில் களமிறங்குகிறேன். செலவு குறைவான தேர்தலாக இருக்க வேண்டும் என்ற சங்கல்பத்தோடு, வேட்பாளர்களாக வந்துள்ளேன். மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை காட்ட வேண்டும். ஊடகங்கள் அடுத்த 40 நாட்கள் என்னுடைய பிரசாரத்தை பூதக்கண்ணாடி போட்டு பாருங்கள். தேர்தல் விதிமுறையை மீற மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Readmore: பயங்கரம்…! மாஸ்கோ துப்பாக்கி சூட்டில் 40 பேர் மரணம், 100-க்கும் மேற்பட்டோர் காயம்…!

Kokila

Next Post

PM Kissan: விவசாயிகளுக்கு 17-வது தவணை தொகை வழங்குவதில் சிக்கல்...! என்ன காரணம் தெரியுமா...?

Sat Mar 23 , 2024
மத்திய அரசு விவசாய தொழிலுக்கு உதவும் வகையில், பி.எம் கிசான் திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் தகுதியான விவசாய குடும்பங்களுக்கு ரூ.6,000 நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது. பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக 3 தவணைகளாக ரூ .2,000 உதவித்தொகை வழங்கபபடுகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரை முதல் தவணை விவசாயிகளின் கணக்கில் வரவு […]

You May Like