fbpx

”இனி இந்த மருந்தை மெடிக்கல்ல கேட்டாலும் தரமாட்டாங்க”..!! மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிரடி உத்தரவு..!!

டெங்கு பரவல் எதிரொலியாக மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகள் வழங்கக் கூடாது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் டெங்கு மற்றும் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்திய மருந்து முறை மருந்துகளான நிலவேம்பு குடிநீர் அரசு மருத்துவமனைகள் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் ஏற்பட்டவுடன் பொதுமக்கள் மருத்துவமனையை அணுக வேண்டும். தாங்களாகவே எந்தவொரு மருந்தும் உட்கொள்ளக் கூடாது. மேலும், கடைகளில் பொதுமக்களுக்கு மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகள் வழங்கக் கூடாது என்று மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொசு உற்பத்தியை தடுக்க 16,005 எண்ணிக்கையில் புகை அடிக்கும் இயந்திரங்களும், பூச்சிக் கொல்லி மருந்துகளான பைரித்திரம் 66,889 லி, மாலத்தியான் 1,28,721 லி மற்றும் டெமிபாஸ் 49,593லி கையிருப்பில் உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு காய்ச்சல் சிகிச்சை குறித்த சிறப்புப் பயிற்சி மருத்துவ வல்லுநர்களால் வழங்கப்பட்டு வருகிறது.

மழைக் காலங்களில் கொசு புழுக்கள், நீர்த்தேக்கங்களில் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை அகற்றிடவும், பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பான குடிநீர், போதிய அளவு குளோரின் கலந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடைந்த குடிநீர் குழாய்களைக் கண்டறிந்து உடனடியாக சரிசெய்யப்படுகிறது.

காய்ச்சல் கண்ட பகுதிகளில் தற்காலிக மருத்துவ முகாம்களில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. எதிர் வரும் வடகிழக்கு பருவ மழையின் போது தொற்றுநோய் பரவாமல் தடுக்க அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தீவிர நடவடிக்கை எடுத்து வந்த போதிலும், பொதுமக்களும் தங்கள் வீடுகளைச் சுற்றி கொசுக்கள் தேங்கா வண்ணமும், குடிநீர் மாசுபடாமல் இருக்கவும் போதிய ஒத்துழைப்பு வழங்குமாறு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

சனாதனம் விவகாரம்.., அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது மும்பையில் புதிய எப்ஐஆர் பதிவு..!

Wed Sep 13 , 2023
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் , சனாதன தர்மத்தை “மலேரியா” மற்றும் “டெங்கு” வுடன் ஒப்பிட்டு பேசியதை அடுத்து, சர்ச்சை வெடித்தது. “சனாதனத்தை எதிர்ப்பதை விட, அதை ஒழிக்க வேண்டும். சனாதனம் என்ற பெயர் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. இது சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கு எதிரானது” என்று உதயநிதி கூறினார். இது தேசிய அளவில் […]

You May Like