fbpx

”உலகமே நம்மை பாராட்டினாலும் திட்டுவதற்கு 4 பேர் இருப்பார்கள்”..!! தமிழ்நாடு அரசை பாராட்டிய வடிவேலு..!!

பசுமை சைதை திட்டத்தின் கீழ், மிக்ஜாம் புயலால் வீழ்ந்த மரங்களை ஈடு செய்யும் வகையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் சைதாப்பேட்டை தொகுயில் 5,000 மரங்களை நடும் நிகழ்ச்சி சைதாப்பேட்டை தாடண்டர் நகரிலுள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டு மரத்தினை நட்டு துவக்கி வைத்தார்.

தொடர்ந்து மேடையில் பேசிய அவர், ”தமிழ்நாடு அரசு பல சோதனைகளை சந்திக்கிறது எனவும் சென்னையில் புயலை அரசியலாக்கிவிட்டார்கள் எனவும் தெரிவித்தார். ஆனால், தென்மாவட்ட மழையில் அவ்வாறு செய்ய இயலவில்லை என குறிப்பிட்டார். இயக்குனர் மாரிசெல்வராஜ் ஏன் அங்கு செல்கிறார் என சிலர் கேட்கிறார்கள். அது அவருடைய ஊர் அவர் செல்லாமல் எப்படி இருப்பார்? மழை பெய்துக்கொண்டிருக்கும் போது தமிழ்நாடு அரசு சிறப்பான பணிகளை செய்து வருகிறது” என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு, ”உலகமே நம்மை பாராட்டினாலும் நம்மை திட்டுவதற்கு 4 பேர் இருப்பார்கள். அதுபோலத்தான் இதுவும் திட்டுபவர்கள் திட்டிக் கொண்டே இருக்கட்டும் அரசாங்கம் தன் கடமையை சிறப்பாக செய்யும்” என குறிப்பிட்டார்.

Chella

Next Post

நெடுஞ்சாலை கட்டண வசூலில் அதிரடி மாற்றம்..!! விரைவில் அறிமுகம்..!! மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்..!!

Thu Dec 21 , 2023
புதிய தொழில்நுட்பத்தில் நெடுஞ்சாலை கட்டண வசூல் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், தற்போது நெடுஞ்சாலை கட்டணங்கள் சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்பட்டு வருகிறது. இனி ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் நெடுஞ்சாலை கட்டணங்கள் வசூலிக்கும் முறை அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், நெடுஞ்சாலைகளில் சரியான தூரத்திற்கு வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]

You May Like