தமிழ் சினிமாவில் தனது சிறு வயது முதல் நடிக்க தொடங்கியவர் சிம்பு. நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முக திறமை கொண்டவராக வலம் வருகிறார். தற்போது, இவர் கைவசம் பல படங்கள் உள்ளன. அதன்படி, பார்க்கிங் பட இயக்குநர் உடன் சிம்புவின் 49 படம் உருவாக இருக்கிறது. அதை தொடர்ந்து அவரது 50 – வது படத்தை சிம்புவே சொந்தமாக தயாரிக்க இருக்கிறார்.
அதுமட்டுமின்றி, ஓ மை கடவுளே மற்றும் சமீபத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த டிராகன் பட இயக்குநருடன் இணைந்து 51 – வது படமான God Of Love படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அட்வைஸை ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.
அதாவது, “என்ன கஷ்டம் வந்தாலும் சரி, என்ன சக்சஸ் வந்தாலும் சரி. ஒரேயொரு விஷயத்தை நான் என்றுமே ஃபாலோ பண்ணுவேன். உயிர் இருக்கா, இல்லையா?. அது இருக்குனா இன்னும் நமக்கு கடவுள் டைம் கொடுத்திருக்கார்னு அர்த்தம். அது போகப் போகிறது என்கிற நேரத்தில் மட்டும் தான் நாம் கவலைப்படணும். அய்யய்யோ இதுக்கப்புறம் நமக்கு பண்றதுக்கான வாய்ப்பு இல்லையேனு. அதான் இருக்கே. அது போகலயே என்றார். சிம்பு சொன்னதை கேட்ட ரசிகர்கள், இனிமேல் வாழ்க்கையில் கஷ்டம் வந்தால் சிம்பு சொன்ன உயிர் விஷயத்தை தான் நினைத்துக் கொள்ளப் போகிறோம் என தெரிவித்துள்ளனர்.