ரேபிஸ் தடுப்பூசியை நாய் கடித்த உடனே போட்டுக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்கத்தில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் பிப்ரவரி 19ஆம் தேதி வரை ஆகிய, 50 நாட்களில் 7800 பேர் நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளனர் என்றும் இதில் 3 பேர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்ட்டுள்ளனர் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் ராணிப்பேட்டையை சேர்ந்த ஒருவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு நாய் கண்டித்துள்ளது. ஆனால் அந்த நபர் அதற்கு பின்பு ரேபிஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ளாததால் மூன்று மாதங்களுக்கு பிறகு உயிரிழந்துள்ளது விசாரணையில் தெரிய வந்ததாகவும் எனவே மக்கள் அனைவரும் நாய் கடித்தவனுடன் ARV எனப்படும் ரேபிஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ளவேண்டும் எனவும் பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், நாய் கடித்தால் மட்டும் ராபியே நோய் வருவதில்லை, பூனை, ஆடு, மாடு உள்ளிட்ட வீட்டு விலங்குகள் மனிதர்களை கடித்தாலும் ரேபிஸ் நோய் வரும்.
நாய் புரண்டினாலும், உடலில் உள்ள சிறு காயங்களில் உமிழ் நீர் பட்டாலும் ரேபிஸ் பரவும்.
நாய் கடித்தால் குறைந்தது 15 நிமிடங்களுக்கு காயத்தை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
நாய் கடித்த பிறகு 1ஆம் நாள், 3ஆம் நாள், 7ஆம் நாள் மற்றும் 28ஆம் நாள் என நான்கு தவணையாக தடிப்போச்சி போடுவதன் மூலம் ரேபிஸ் நோய் ஏற்படாமல் தடுக்க முடியும்.
ரேபிஸ் தடுப்பூசி மற்றும் இம்முனோகுளோபுலின் (Immunoglobulin) மருந்துகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுவதாகவும், இதனை மக்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ளுமாறும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More: கார் ஓட்டும்போது வந்த மாரடைப்பால் பெரும் விபத்து..!! நெஞ்சை பதற வைக்கும் காட்சி