fbpx

’தப்பித் தவறி கூட இந்த இடங்களுக்கு சுற்றுலா போய்டாதீங்க’..!! எங்கெங்கு தெரியுமா..?

சுற்றுலாத் தலங்கள் என்பது பல்வேறு வகைப்பட்டுள்ளது. ஒரு சில இடங்கள் குளுகுளு வென்று இருக்கும். ஒரு சில இடங்கள் வெதுவெதுப்பாக இருக்கும். தார் பாலைவனம் போன்ற இடங்கள் வறண்டு காணப்படும். இப்படி பலதரப்பட்ட இடங்கள் இந்தியாவில் இருக்கின்றன. அந்த வரிசையில், இந்த கோடை காலத்தில் இந்தியாவில் ஒரு சில இடங்களுக்கு தப்பித்தவறி கூட போய்விடக்கூடாது. அடிக்கும் வெயிலில் இந்த இடங்களுக்கு போனால் நொந்து போய் தான் வருவோம். இந்த கோடை விடுமுறைக்கு திட்டமிடக்கூடாத இடங்களின் பட்டியலை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கோவா : 

இளைஞர்களின் கனவு சுற்றுலாத் தலமாக ‘பார்ட்டி நகரம்’ கோவா இருந்து வருகிறது. கறைகள் முடியா கடற்கரை, அழகான நிலப்பரப்புகள் நிறைந்த பகுதியாக இருந்தாலும் கோடையின்போது வழக்கத்தை விட இரு மடங்கு வெப்பம் அதிகமாகவே இருக்கும். எனவே, இப்போது முதல் ஜூன் தொடக்கம் வரை அங்க செல்வதை கண்டிப்பாக தவிருங்கள்.

ஆக்ரா: 

தாஜ்மஹால் இருக்கும் ஆக்ராவும் ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டமானது அதிகமாகவே இருக்கும். ஆனால், வெயில் காலத்தில் டெல்லி மற்றும் சுற்றியுள்ள இடங்களின் வெப்பநிலை பற்றி செய்திகள் கேட்டிருப்போம். நேரத்தில் அங்கு செல்வது அதிக வெப்பநிலை மற்றும் வெப்ப காற்றுக்கு இடையில் உங்களைத் தள்ளிவிடும். அதனால் வெப்பம் தணிந்த பின்னர் செல்வது நன்று.

ஜெய்சல்மர்: 

தார் பாலைவனத்தை ஒட்டி அமைந்துள்ள இந்தியாவின் தங்க நகரம் என்று அழைக்கப்படும் ஜெயசல்மர் பிரமிக்க வைக்கம் மஞ்சள் நிற மணல் பரப்புகளை கொண்ட இடமாக உள்ளது. இங்கிருக்கும் மணல் திட்டுக்கள் கண்களுக்கு விருந்தாக இருந்தாலும், சுமார் 42 டிகிரி வரை கொளுத்தும் வெயில் உங்களுக்கு அசெளகரியத்தை தரும். எனவே, ஜூன் வரை இங்கு செல்வதை தவிருங்கள்.

சென்னை: 

தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் சென்னையில் அழகான கடற்கரை, பழங்கால கட்டிடங்கள், கோயில்கள் என ஏராளமான இடங்கள் உள்ளன. 3 நாட்களாக மழை பெய்தாலும் சாதாரணமாக கோடை காலத்தில் சென்னையில் எப்படி அனல் அடுப்பாக இருக்கும் என்பது நமக்கு தெரியும். அதனால், இந்த வெயிலில் போய் காய்ந்து கருவாடாகாமல் ஜூன் மாதத்துக்கு பிறகு வந்தால் பயணத்தை கொண்டாடலாம்.

கஜுராஹோ: 

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்திருக்கும் கஜுராஹோ பகுதியில் உள்ள கண்களை கவரும் விதமாக சுவர் சிற்பங்கள் இடைக்கால பாரம்பரியத்தின் சின்னமாக திகழ்கிறது. கட்டிடம் மற்றும் சிற்ப கலை மீது ஆர்வம் உள்ளோருக்கான சிறந்த இடமாக இது இருக்கும். இங்கு அதை ரசித்து பார்க்க முடியாத அளவில் வெயில் வாட்டி வதைக்கும். இதையும் ஒரு மதத்திற்கு ஒத்திப்போடுங்கள்.

அமிர்தசரஸ்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள தங்க கோயில் அனைத்து மதத்தினரும் செல்லும் கோயிலாக இருக்கிறது. உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருவதோடு கூட்டம் நிறைந்த பகுதியாகவே அமைந்திருக்கும். மே மாதத்தில் இங்கு நிலவும் உச்சகட்ட வெயில் காலமாக இப்போது தங்கத்தை காய்ச்சி ஊற்றியது போல வெப்பம் இருக்கும். அதனால் 2 மாதங்களுக்கு பிறகு போகலாம்.

Chella

Next Post

நான் முடிவு செய்யவில்லை!... வர்ணனையாளரின் கேள்விக்கு கூலாக பதிலளித்த தல தோனி!... ரசிகர்கள் மகிழ்ச்சி!

Fri May 5 , 2023
இது தான் எனது கடைசி ஐபிஎல் என்று நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள். ஆனால், நான் முடிவு செய்யவில்லை என்று வர்ணனையாளரின் கேள்விக்கு தல தோனி கூலாக பதிலளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஐபிஎல் 16 சீசனின் லக்னோ மைதானத்தில் நடைபெற்ற 45வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இதனிடையே, இப்போட்டிக்கான டாஸ் கேட்பதற்கு மைதானத்துக்கு வந்த சென்னை கேப்டன் எம்எஸ் […]

You May Like