fbpx

உடல் எடை குறைந்தாலும் தொப்பை மட்டும் குறையவே மாட்டீங்குதா..? அப்படினா இந்த தண்ணீரை குடித்து பாருங்க..!! சூப்பர் ரிசல்ட்..!!

நவீன கால கட்டத்தில் அன்றாட பழக்கவழக்கங்களும், மாறிவரும் உணவு பழக்கமும், உடல் எடையை அதிகரித்து உடலில் பல்வேறு வகையான நோயை ஏற்படுத்துகிறது. உடல் எடை குறைப்பதற்கு பலரும் பல விதமான முயற்சிகளை எடுத்து வந்தாலும் உடல் எடையை குறிப்பாக தொப்பையை குறைக்க முடியவில்லை என்பது பலரது கவலையாக உள்ளது. 

உடல் எடையை குறைத்தாலும் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு குறைவது மிகவும் சிரமமான விஷயமாக உள்ளது. இந்த வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை நீக்கி தொப்பை இல்லாமல் இருக்க இந்த ஒரு பானம் குடிப்பதன் மூலம்  எளிதாக குறைக்கலாம். இந்த பானம் எப்படி செய்யலாம் என்பது குறித்தும், இதன் நன்மைகள் என்னென்ன என்பதையும் பார்க்கலாம்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஒரு கப் வெந்தயம் மற்றும் பெருஞ்சீரகத்தை சம அளவு எடுத்துக் கொண்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின்பு ஊற வைத்த தண்ணீரை வடிகட்டி தேன் கலந்து காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். இவ்வாறு செய்தால் உடல் எடையை 10 நாட்களில் குறைக்கலாம். மேலும் இந்த நீரின் மூலம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா.?

1. பெருஞ்சீரகம் மற்றும் வெந்தயம் ஊறவைத்த தண்ணீரீல் ஆன்ட்டி ஆக்சிடெண்ட்கள் அதிகம் இருப்பதால் இதை குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் நீங்கும்.

2. வெந்தயம் மற்றும் பெருஞ்சீரகம் ஊற வைத்த தண்ணீரை குடிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது.

3. செரிமான பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக இந்த மேஜிக் பானம் இருந்து வருகிறது. மேலும் வயிற்றில் உள்ள கிருமிகளை சுத்தப்படுத்தி குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமலும் தடுக்கிறது.

4. வெந்தயம் மற்றும் பெருஞ்சீரகம் ஊறவைத்த தண்ணீரை தினமும் குடிப்பதன் மூலம் வயிற்று பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து தொப்பையை குறைப்பதற்கு பெரிதும் உதவி செய்கிறது. இந்த குடிநீரை 15 நாட்களுக்கு மேலாக குடித்து வரக்கூடாது இது உடலில் ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டு வருகிறது.

Read More : தலையில் கை வைத்து கதறி அழுத பெண்..! எச்சரித்த டிரம்ப்..!! ஆடிப்போன ஜெலன்ஸ்கி..!! திடீரென திரும்பிய கேமரா..!!

English Summary

Even if you lose weight, losing belly fat is a very difficult thing to do.

Chella

Next Post

கர்நாடகாவை அலறவிடும் பறவை காய்ச்சல்!. 3 மாவட்டங்களில் பாதிப்பு!. 1000க்கும் மேற்பட்ட கோழிகள் அழிப்பு!. மக்கள் பீதி!

Sun Mar 2 , 2025
Bird flu is making Karnataka scream!. 3 districts affected!. More than 1000 chickens destroyed!. People are panicking!

You May Like