fbpx

உயிரே போனாலும்..!! 2026இல் ஆட்சி அமைத்தே தீருவோம்..!! பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி பரபரப்பு பேட்டி..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீட்டிற்கு அருகே இருந்த கொடிக் கம்ப விவகாரத்தில் அதிகாரிகள் மற்றும் ஜேசிபி ஓட்டுநர் மீது தாக்குதலில் ஈடுபட்டதாகக் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கடந்த அக்டோபர் 20ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ஜாமீன் கோரி அமர் பிரசாத் ரெட்டி தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், ஜேசிபி வாகனத்தை சேதப்படுத்தியதற்காக எத்தனை நாட்கள் சிறையில் வைத்திருப்பீர்கள் என கேள்வி எழுப்பி, சேதப்பட்ட ஜேசிபி வாகன உரிமையாளர்களுக்கு 12,000 ரூபாய் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கினார்.

இந்நிலையில், ஜாமீன் வழங்கியதையடுத்து, அமர்பிரசாத் ரெட்டி புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான பிறகு நேராக பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வந்தார். பின்னர் அவர் பேசுகையில், 2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சி அமைத்தே தீருவோம் என நம்பிக்கை தெரிவித்து, கட்சிக்காக கொடிக்காக சிறைக்கு சென்றது பெருமையாக உள்ளது என்றும் உயிர் இருக்கும் வரை கட்சியில் தான் இருப்பேன் எனக் கூறினார்.

Chella

Next Post

மேல்முறையீடு செய்தவர்களுக்கு எப்போது ரூ.1,000 கிடைக்கும்..? வெளியான முக்கிய அப்டேட்..!!

Sun Nov 12 , 2023
தமிழ்நாட்டில் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என சொல்லப்பட்டாலும், 14ஆம் தேதியே குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இதில் பெண்களுக்கு 3 தவணைக்கான பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்நிலையில், மகளிர் உரிமை தொகை குறித்து பேசிய முதல்வர் […]

You May Like