fbpx

’காலில் செருப்பு கூட இல்லாம கமல் கூட’..!! ’எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு போகலாம்னு இருந்துச்சு’..!! சில்க் ஸ்மிதா சொன்ன பகீர் தகவல்..!!

தமிழ் சினிமாவில் 80-களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், பாக்கியராஜ் என ஏராளமான நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவருக்கு கவர்ச்சி காட்டாமல் நடிக்க வேண்டும் என்பது ஒரு ஆசையாக இருந்ததாம். அலைகள் ஓய்வதில்லை படத்தில் அப்படி ஒரு வேடத்தை அவருக்கு பாரதிராஜா கொடுத்தார். இப்படத்தை பார்த்த எம்.ஜி.ஆர் முதல் பலரும், சிலுக்கு இதுபோன்ற வேடங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர். அவருக்கும் அந்த ஆசை இருந்தது.

ஆனால், தமிழ் சினிமா உலகம் அவரை கவர்ச்சி கன்னியாக மட்டுமே பார்த்தது. கிராமப்புற வேடங்களிலும், கவர்ச்சி நடனமாடும் பெண்ணாகவும் மட்டுமே அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க அவருக்கு வித்தியாசமான வேடங்களை கொடுத்தவர் இயக்குநர் பாலுமகேந்திரா. அவரின் படங்களில் நகரத்து பெண்ணாகவும், பணக்கார பெண்ணாகவும் நடித்திருக்கிறார். பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி நடித்த மூன்றாம் பிறை படத்திலும் கமல் மீது ஆசைப்படும் பணக்கார பெண்ணாக வருவார் சில்க் ஸ்மிதா.

பொன்மேனி உருகுதே என்கிற பாடலிலும் கவர்ச்சி நடனம் ஆடியிருப்பார். ஒருமுறை இந்த பாடலில் நடித்தது பற்றி பேசிய சில்க் ஸ்மிதா, ”பெரிதாக உடை எதுவுமில்லாமல், காலில் செருப்பு கூட இல்லாமல், ஊட்டி குளிரில் அந்த பாடலில் கமலுடன் நான் நடனமாடியபோது கதறி அழுவேன். எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு போய்விடலாம்” என்று கூட நினைத்திருக்கிறேன்.

ஆனால், ”அப்பாடலை திரையில் பார்க்கும்போது அவ்வளவு அற்புதமாக இருந்தது. திரையரங்குகளில் அந்த பாடலுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை பார்த்தபோது நான் பட்ட கஷ்டமெல்லாம் மறந்துபோனது. அந்த படத்திற்கு பின் அதுபோல எனக்கு நிறைய நல்ல வேடங்களும் கிடைத்தது” என சில்க் ஸ்மிதா கூறியிருக்கிறார்.

Chella

Next Post

முன்னாள் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரருக்கு 8 வருட சிறை தண்டனை.! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

Wed Jan 10 , 2024
17 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் நேபாள் கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சேனுக்கு 8 வருட சிறை தண்டனை வழங்கி இருக்கிறது. இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேபாள் நாட்டைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சேன். சுழற் பந்துவீச்சாளரான இவர் நேபாள் அணியின் கேப்டனாகவும் இருந்திருக்கிறார். ஐபிஎல் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிபிஎல் போன்ற புகழ்பெற்ற டி20 தொடர்களிலும் விளையாடியவர். 2022 ஆம் […]

You May Like