fbpx

”என் மனைவி கூட இனி வாழ முடியாது”..!! விவாகரத்து கோரினார் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார்..!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமானவர் ரவீந்திரநாத் குமார். இவருக்கும் ஆனந்தி என்பவருக்கும் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் இடையே அண்மைக் காலமாகக் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

இந்நிலையில், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ரவீந்திரநாத் குமார் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். கருத்து வேறுபாடு என்ற காரணத்தைக் கூறி அவர் விவாகரத்து கோரியுள்ளார். இந்த மனு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு எண்ணிடப்பட்டுள்ளது. எனவே, இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

இந்த வழக்கில் ரவீந்திரநாத் குமார் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளதால், இதற்கு அவரது மனைவி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த மனு விசாரணைக்கு வரும்போது ரவீந்திரநாத் குமார் நேரில் ஆஜராக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

செம...! ஆய்வக மானியமாக அதிகபட்சம் ரூ.50,000 வரை பெறலாம்...! பி.ஐ.எஸ் சூப்பர் அறிவிப்பு...!

Wed Sep 20 , 2023
இந்திய தேசிய தர நிர்ணய அமைப்பான பி.ஐ.எஸ் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 6467 தர நிர்ணய கிளப்களை நிறுவியுள்ளதாக அறிவித்துள்ளது. குழந்தைகள் ஒரு வலுவான மற்றும் துடிப்பான இந்தியாவின் சிற்பிகள். நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தர நிர்ணய கிளப்களை உருவாக்கும் பி.ஐ.எஸ், தொலைநோக்குப் பார்வை கொண்ட முன்முயற்சி மூலம், இந்தியாவின் எதிர்காலத்தை அது ஒளிரச் செய்கிறது. தரநிலை மற்றும் அறிவியல் மனப்பான்மையை […]

You May Like