அதிகாலையில் நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். இது இதயம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது, மூட்டு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது, எடை இழப்புக்கு உதவுகிறது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கிறது. காலை நடைப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், மாலையில் நடக்கும் வழக்கம் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை.
மொத்த உடற்பயிற்சியையும் செய்வதற்கான சிறந்த வழிகளில் நடைப்பயிற்சியும் ஒன்றாகும். அதே போல் உடலை வலுப்படுத்தவும் மற்றும் உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்கவும் செய்கிறது. ஒரு நாள் முழுவதும் வேலை செய்து களைப்பாக இருந்தாலும், மாலையில் வெறும் 30 நிமிட நடைப்பயிற்சி உடலுக்கு உற்சாகம் தருவதோடு, மனதையும் தெளிவுபடுத்த உதவுகிறது. மாலையில் நடைபயிற்சி செய்வது, பகலில் நீங்கள் அதிகம் பயன்படுத்தாத உங்கள் தசைகளை வேலை செய்ய அனுமதிக்கிறது. இது மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கும் போது உங்கள் உடலையும் மனதையும் தளர்த்த உதவுகிறது.
முதுகுவலியைப் போக்க உதவுகிறது
அலுவலகத்தில் நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருப்பது உங்கள் தோரணையை சீர்குலைத்து, முதுகுவலிக்கு வழிவகுக்கும். இன்று பல இளைஞர்கள் அந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். எனவே மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்வது கீழ் முதுகில் உள்ள விறைப்புத்தன்மை மற்றும் வலியை விடுவிக்க உதவுகிறது.
தூக்கத்தை சீராக்க உதவுகிறது
மன அழுத்தம் மற்றும் பதட்டம் இளைஞர்களுக்கு நிறைய தூக்க பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஆகையால், மாலையில் நீண்ட நடைப்பயிற்சி உங்கள் உடல் புத்துணர்ச்சி பெற தேவையான அளவு ஓய்வு பெற உதவுகிறது. மாலை நேர நடைபயிற்சி ஓய்வு மற்றும் சிறந்த தடையற்ற தூக்கத்தை வழங்குகிறது.
தசைகள் வலுவடையும்
விறுவிறுப்பான மாலை நடைப்பயிற்சி உங்கள் தசைகளை வலுப்படுத்த உதவும். நடைப்பயிற்சி, உங்கள் தசைகளை வலிமையாக்குவதற்கும், மேம்பட்ட நெகிழ்வுத்தன்மையை வழங்குவதற்கும் தேவையான ஆற்றலை அளிக்கும்.
மன ஆரோக்கியம்
நீண்ட நாள் விறுவிறுப்பான நடைப்பயணத்திற்குப் பிறகு நிதானமாக நடப்பது நிச்சயமாக மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வில் இருந்து விடுபட உதவும். நிபுணர்களின் கூற்றுப்படி, நடைபயிற்சி உங்கள் மனதை அமைதிப்படுத்த உதவுகிறது.
செரிமானத்தை சீராக்கும்
இரவு உணவுக்குப் பிறகு நடப்பது செரிமான பிரச்சனைகளை எளிதாக்குகிறது. இரைப்பை பிரச்சனைகளை ஏற்படுத்தாமல், உங்கள் உடல் உணவை எளிதில் செரிமானம் செய்ய உதவும்.
நீரிழிவு மேலாண்மை
மாலை அல்லது இரவு நடைப்பயிற்சி உங்கள் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி, காலையில் ஒருமுறை 45 நிமிட நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களைக் காட்டிலும், உணவுக்குப் பிறகு 20 நிமிட நடைப்பயிற்சி மேற்கொண்டவர்ளுக்கு ரத்த குளுக்கோஸ் அளவு மேம்படுகிறது.