fbpx

’ஒருசிலர் செய்யும் தவறுக்கு அனைவரும் பொறுப்பாக முடியாது’..!! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

ஒருசிலர் கட்டணத்தை செலுத்தவில்லை என்பதற்காக ஒட்டு மொத்த குடியிருப்புகளுக்கும் குடிநீர், கழிவுநீர் இணைப்பை துண்டிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 15 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அதில், ஒரு குடும்பத்தினர் மட்டும் குடிநீர் மற்றும் கழிவுநீருக்கான கட்டணத்தை செலுத்தவில்லை எனக்கூறி ஒட்டுமொத்த குடியிருப்புகளுக்கும் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பை துண்டிக்க சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனை எதிர்த்து அந்த குடியிருப்பில் வசிக்கும் எஸ்.வாசுதேவன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.சரவணன் பிறப்பித்துள்ள உத்தரவில், “குடியிருப்பில் வசிக்கும் ஒருசிலர் உரிய கட்டணத்தை செலுத்தவில்லை என்பதற்காக ஒட்டுமொத்த குடியிருப்புகளுக்கும் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பை துண்டிக்க முடியாது. ஒருவருக்காக மற்ற குடும்பத்தினரை கஷ்டப்படுத்த முடியாது. கட்டணத்தை யார் செலுத்த வில்லையோ அவரிடமிருந்து நிலுவைத் தொகையை வசூலிக்க வேண்டும். சிலர் செய்யும் தவறுக்கு அனைவரும் பொறுப்பாக முடியாது. எனவே, அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பைத் துண்டிக்க சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு தடை விதிக்கப்படுகிறது” என உத்தரவிட்டுள்ளார்.

Chella

Next Post

2024 பிப்ரவரி மாதம் தேர்வு...! மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு...!

Sat Dec 2 , 2023
மத்திய ஆயுத போலீஸ் படைகளில் கான்ஸ்டபிள் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான கணினி அடிப்படையிலான போட்டித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை 24.11.2023 -ம் தேதி வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்களை ssc.nic.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 31.12.2023 ஆகும். ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 01.01.2024 ஆகும். ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில், தேர்வர்கள் ஸ்கேன் செய்யப்பட்ட வண்ண பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை […]

You May Like