fbpx

எல்லோரும் ரெடியா?… நெருங்கும் தீபாவளி!… அறிவிப்பு வந்தாச்சு மக்களே!… சென்னை தீவுத்திடலில் 15 நாட்கள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் 15 நாட்கள் பட்டாசு கடை அமைத்து விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே பலரின் மனதிலும் மகிழ்ச்சி பொங்கும். பட்டாசு, புத்தாடை என தீபாவளிக்கு ஒரு மாதம் முன்னரே நாம் தயாராகிவிடுவோம். இந்த நிலையில், தீபாவளியையொட்டி பட்டாசு விற்பனை கொடிகட்டி பறக்கும் என்பதால், மத்திய மாநில அரசுகள் பட்டாசு விற்பனை மற்றும் வெடிகள் வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை தீவுத்திடலில் வழக்கமாக அமைக்கப்படும் பட்டாசு கடைகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, பட்டாசு கடைகள் அக்டோபர் 29ஆம் தேதி முதல் நவம்பவர் 12ஆம் தேதி வரை சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்கப்படும் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் தெரிவித்துள்ளது. பட்டாசு விற்பனைக்காக தீவுத்திடலில் 55 கடைகள் அமைக்கபட உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுங்கள்!… மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவு!

Thu Aug 24 , 2023
தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தலைமை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் உள்ளதா என்றும், பொது மக்களுக்கு தேவைப்படும் மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அரசு ஆரம்ப […]

You May Like