fbpx

”நாளைக்கு எல்லோரும் ஸ்பாட்ல இருக்கணும்”..!! தவெக மாவட்ட நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு..!! விஜய் காட்டும் அதிரடி ஆக்‌ஷன்..!!

நடிகர் விஜய் கடந்தாண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அக்டோபர் மாதம் விக்கிரவாண்டி வி.சாலையில் கட்சியின் முதல் மாநில மாநாட்டையும் பிரம்மாண்டமாக நடத்தினார். அந்த மாநாட்டுக்கு கூடிய கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவு பெறவுள்ள நிலையில், இதுவரை மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தில் பொறுப்பு வகித்தவர்களே தற்போது தமிழக வெற்றிக் கழகத்திற்கும் மாவட்ட தலைவர்களாக தொடர்ந்து வருகின்றனர். எனவே, கட்சிக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய் உத்தரவிட்ட நிலையில், நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் நாளை (ஜனவரி 10) தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க மாவட்டத் தலைவர்கள் மற்றும் அணித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர்கள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எதிரொலி..!! பொங்கல் பரிசுத் தொகுப்பு ரத்து..!! ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற மக்கள்..!!

English Summary

It has been reported that a district executive meeting of the Tamil Nadu Victory Party will be held tomorrow (January 10) under the chairmanship of General Secretary Pussy Anand.

Chella

Next Post

உங்கள் நிலத்திற்கு வேறு ஒருவர் பட்டா வாங்கிட்டாரா..? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..

Thu Jan 9 , 2025
Has someone else bought the title to your land?

You May Like