கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ, இளம்பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த சம்பவத்தை அடுத்து, பாதிரியார் தலைமறைவானார். இந்நிலையில், பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது பாலியல் ரீதியாக வாட்ஸ் அப் சாட்டிங் செய்து தொல்லை செய்ததாக புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் அளித்த வாக்குமூலத்தில், லேப்டாப்பில் இருந்த இளம்பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை நான் வெளியிடவில்லை. நான் யாரையும் மிரட்டியும் வீடியோ எடுக்கவில்லை. அவர்களுக்கு தெரியாமல், அவர்கள் விரும்பாமல் எதையும் நான் செய்ததில்லை என கூறி உள்ளார். வீடியோவில் இருந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் பாதிரியார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பெனடிக்ட் ஆன்றோவுக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்ட பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.