fbpx

இன்று முதல் எல்லாம் மாறிடுச்சு!… புது ரூல்ஸ்!… கவனம் மக்களே!

New rules: இன்று தொடங்கிவுள்ள மே மாதத்தில் நம்முடைய அன்றாட நிதிச் சூழலை நேரடியாகப் பாதிக்கும் வகையில் சில மாற்றங்கள் வந்துள்ளன. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.

நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரல் மாதம் முடிந்து மே மாதம் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு மாதமும் பல்வேறு நிதி சார்ந்த விதிமுறைகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் இந்த மே மாதத்திலும் பல விதிகளில் மாற்றம் வந்துள்ளது. அவை உங்கள் பாக்கெட்டை நேரடியாக பாதிக்கும்.

பான் கார்டு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் கேஒய்சி விதிகளில் மட்டும் ஏப்ரல் 30ஆம் தேதி முதலே அமலுக்கு வந்துவிட்டது. மியூச்சுவல் ஃபண்ட் கணக்கை தொடங்கும்போது, அதில் கொடுக்கப்படும் உங்களது பெயர், பான் கார்டில் இருக்கும் பெயரோடு ஒத்துபோக வேண்டும். இல்லையென்றால், உங்களது மியூச்சுவல் ஃபண்ட் கணக்கு நிகாரிக்கப்படும். அதேபோல பிறந்த தேதியும் சரியாக இருக்க வேண்டும். யுனிபார்ம் கேஒய்சி விதிகளின்படி இது அமலுக்கு வந்துள்ளது. ஆகவே, வரும் நாட்களில் பான் கார்டில் உங்களது பெயர் மற்றும் பிறந்த தேதியில் மாற்றம் அல்லது பிழை இருந்தால், அதை உடனே சரி செய்து விடுங்கள்.

இன்றுமுதல் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் மற்றும் டெபிட் கார்டு ஆகியவற்றில் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. ஆகவே, மே 1ஆம் தேதிக்கு பிறகு ஐஎம்பிஎஸ் மூலம் ரூ.1000-க்கும் கீழ் பணம் அனுப்பினால் ரூ.2.5 கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல ரூ.1000 முதல் ரூ.25000 வரையில் அனுப்பினால் ரூ.5 கட்டணம் செலுத்த வேண்டும்.

மேலும், ரூ.25000 முதல் ரூ.5 லட்சம் வரையில் பணம் அனுப்பினால், ரூ.15 கட்டணமாக வசூலிக்கப்படும். டெபிட் கார்டு வருடாந்திர கட்டணமாக ரூ.200 வசூலிக்கப்படும் அதுவே கிராமப்புறங்களில் ரூ.90ஆக எடுத்து கொள்ளப்படும். இந்த விதிகள் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

யெஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மினிமம் பேலன்ஸ் பராமரிப்பில் இன்றுமுதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. ஆகவே, யெஸ் ப்ரோ மேக்ஸ் சேமிப்பு கணக்கில் ரூ.50000 மினிமம் பேலன்ஸ் தொகை இருக்க வேண்டும். இல்லையென்றால், அதிகபட்சமாக ரூ.1000 கட்டணம் செலுத்தவேண்டும். அதேபோல யெஸ் ப்ரோ பிளஸ், யெஸ் எசென்ஸ் மற்றும் யெஸ் ரெஸ்பெக்ட் சேமிப்பு கணக்குகளில் ரூ.25000 மினிமம் பேலன்ஸ் பராமரிக்க வேண்டும். இல்லையென்றால், அதிகபட்சமாக ரூ.750 கட்டணம் இருக்கும். யெல் வேல்யூ மற்றும் கிஷான் கணக்குக்கு மினிமம் பேலன்ஸ் ரூ.5000 இருக்கிறது.

இல்லையென்றால், ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல யெஸ் மை ஃபர்ஸ்ட் கணக்குக்கு ரூ.2500 மினிமம் பேலன்ஸ் பராமரிப்பு இருக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், யெஸ் வங்கியின் கிரெடிட் கார்டில் ஸ்டேட்மெண்ட் சுழற்சிக்கு (Statement Cycle) 1 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது, ஒரு ஸ்டேட்மெண்ட் சுழற்சியில் ரூ.15000-க்கும் மேல் யூடிலிட்டி பரிமாற்றம் செய்திருந்தால், ஜிஎஸ்டி மற்றும் 1 சதவீதம் வரி விதிக்கப்படும்.

இதேபோல டெபிட் கார்டுக்கும் புதிய விதிகள் இருக்கின்றன. அதன்படி, யெஸ் வங்கி ஏடிஎம் தவிர்த்து மற்ற வங்கி ஏடிஎம்களில் மாதத்துக்கு 5 முறை பணம் மட்டுமே எடுக்கலாம். அதன்பின் கட்டணம் வசூலிக்கப்படும். முன்பு சொன்னதை போலவே, கிரெடிட் கார்டு யூடிலிட்டி பரிமாற்றத்தில் ஐடிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கும் இன்றுமுதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. இந்த விதியின்படி யூடிலிட்டி பரிமாற்றம் ரூ.20000-க்கும் மேல் சென்றால், 18 சதவீதம் ஜிஎஸ்டி மற்றும் 1 சதவீத வரி செலுத்த வேண்டி இருக்கும்.

Readmore: “தமிழ்நாடுதான் முன்னோடி” – மே தினத்தின் பின்னணியும்… ரத்தத்தால் எழுத்தப்பட்ட வரலாறும்…!

Kokila

Next Post

பிளே ஸ்டோரிலிருந்து 20 லட்சம் அப்ளிகேஷன்களை தடை செய்த Google.!! முழு விவரம்.!!

Wed May 1 , 2024
கூகுள் நிறுவனம் பாலிசி மீறுதலில் ஈடுபட்ட 20 லட்சத்திற்கும் அதிகமான செயலிகளை தடை செய்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 2.28 மில்லியன் பயன்பாடுகள் கூகுளின் கொள்கைகளை மீறி செயலிகளை வெளியிட்டதால் அவற்றின் மீது தடை விதிக்கப்பட்டுள்ளதாக google தெரிவித்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரில் இருந்து 333,000 மோசமான கணக்குகளையும் தடை போலி கணக்குகளையும் கூகுள் தடை செய்து இருக்கிறது. உறுதிப்படுத்தப்பட்ட மால்வேர் செய்திகள் மற்றும் குற்றவாளிகளால் உருவாக்கப்பட்ட அப்ளிகேஷன்கள் […]

You May Like