fbpx

எல்லாம் போச்சு..!! மிகப்பெரிய சைபர் அட்டாக்..!! உடனே பாஸ்வேர்டுகளை மாத்துங்க..!!

இண்டெர்நெட் ஆர்கேவ் எனப்படும் டிஜிட்டல் லைப்ரரி இணையதளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

Internet Archive எனப்படும் இணைய ஆவணக் காப்பகம் என்பது இலவச, திறந்த கணினிவழி மின் நூலகம் போன்று செயல்படுகிறது. வே பேக் மெஷின் என்று இணையத்தில் பரவலாக அறியப்படும் இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் கலிபோர்னியவில் உள்ள சான்பிரான்சிஸ்கொவில் அமைந்துள்ளது. இந்த ஆவணக் காப்பகத்தில் பல கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் தான், இண்டெர்நெட் ஆர்கேவ் இணையவழி சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. பாலஸ்தீனிய ஆதரவு ஹேக்கர் குழு இந்த சைபர் அட்டாக்கிற்கு பொறுப்பேற்றுள்ளது. 31 மில்லியன் அதாவது 3 கோடிக்கு அதிகமான பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டுள்ளன. மின்னஞ்சல், ஸ்க்ரீன் நேம், பாஸ்வேர்டுகள் உள்ளிட்ட தரவுகளும் திருடப்பட்டுள்ளதாம். இதனால், உடனடியாக பயனர்கள் தங்கள் பாஸ்வேர்டுகளை மாற்றிக்கொள்ளுமாறு சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சைபர் தாக்குதல் நடைபெற்றிருப்பதை இண்டெர்நெட் ஆர்கேவும் உறுதி செய்திருக்கிறது. அதன் நிறுவனர் ப்ரெவ்ஸ்டர் காலே கூறுகையில், “சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ளதால், ஜே எஸ் லைப்ரரி பயன்படுத்துவதை முடக்கி வைத்துள்ளோம். பாதுகாப்பை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கூடுதல் விவரங்கள் பின்னர் பகிரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : கம்ப்யூட்டர், செல்போனில் வேலை பார்க்குறீங்களா..? இந்த நோய் பற்றி தெரியுமா..? கண்களுக்கு ஆபத்து..!! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

English Summary

A digital library website called the Internet Archive has come under cyber attack.

Chella

Next Post

உங்கள் போனில் இருக்கும் PDF File-களால் பெரும் ஆபத்து..!! உடனே செக் பண்ணுங்க..!!

Fri Oct 11 , 2024
Go to the folder and check if you have downloaded a large number of PDF files.

You May Like