விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் வினுஜா, மாயா, பூர்ணிமா எல்லோரும் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மாயா, இங்க எல்லாமே ரிவேஞ்ச் கேம் தான். விஷ்ணு எல்லார் கிட்டையுமே சண்டை போட்டிருக்கிறார்.
அதனால விஷ்ணுவை எல்லோரும் நாமினேட் பண்ணுவாங்க என்று சொல்கிறார். அப்போது பூர்ணிமா பிரதீப்புக்கும் அதுக்கான சந்தர்ப்பம் இருக்கு என்கின்றார். தொடர்ந்து நீங்க யாருக்கு ஓட்டுப் போடுவீங்க என்று கேட்க மாயா, நான் ரவீனாவுக்கும் விசித்திராவுக்கும் போடுவேன் என்கிறார். அப்போது பூர்ணிமா தான் மணிக்கும் விசித்திராவுக்கும் போடுவேன் என்கிறார். இத்துடன் இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ முடிவடைகிறது.