காருக்கு வழிவிடாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணைத் தாக்கி மானபங்கம் செய்ய முயற்சித்ததாக சேலம் அருகே அ.தி.மு.க. முன்னாள்நிர்வாகி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகரத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னாள் செயலாளராக இருந்தவர் இளங்கோ (33). இவர் முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை வீடு புகுந்து தாக்கியுள்ளார். அதோடு மட்டுமின்றி அவரை , மானபங்கம் செய்ய முயற்சி செய்துள்ளார். இது தொடர்பாக நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் நரசிங்கபுரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் இளங்கோ உள்பட 6 பேரையும் கைது செய்தனர்.

இளங்கோ தன்னுடைய நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்த போது அந்த பெண் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். காருக்கு வழிவிடாமல் இடையூறாக சென்றதால் அவர்கள் ஆத்திரடைந்தனர். இதையடுத்து 5 பேரை அழைத்துக் கொண்டு இளம்பெண்ணின் வீட்டுக்குச் சென்று தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.