திருத்தணி பகுதியில் ஒரு கோவிலில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்த இளைஞர் ஒருவர் 20க்கும் அதிகமான குழந்தைகளை அழைத்து வந்து அவர்களுடைய கையில் பூங்கொத்தை கொடுத்து வாழ்த்து தெரிவித்ததோடு, மணமகனுக்கு தானும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த அந்த நபர், அங்கிருந்து செல்ல முற்பட்டபோது மணமகனிடம் ஆல் தி பெஸ்ட் என்று தெரிவித்தார். ஆனால் மணப்பெண்ணை மட்டும் அவர் கண்டு கொள்ளவே இல்லை. கடைசியாகத்தான் அந்தப் பெண்ணை அவர் காதலித்து வந்தார் என்ற விவரம் தெரியவந்துள்ளது.
அதன் பிறகு அவர் அழைத்து வந்த குழந்தைகளுடன் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அந்த இளைஞர், என்னுடைய பெயர் சரவணன் பழனிச்சாமி ஏன் இந்த திருமண விழாவிற்கு வந்திருக்கிறோம் என்றால்? நானும் அந்த பெண்ணும் 7 வருடங்களாக காதலித்தோம்.
ஆனால் அவர் இன்னொரு நல்ல வரம் கிடைத்ததால் என்னை விட்டு சென்று விட்டார். இது போன்ற தருணத்தில் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால்? இந்த காதல் அல்லது ஒருதலை காதலை விட்டு, விட்டு சென்றார்கள் என்றால் எந்தவிதமான தவறான முடிவும் எடுக்க கூடாது.
அவர்கள் எங்கிருந்தாலும் சந்தோஷமாக இருக்க வேண்டும். ஒரு தலை காதலில் தொடர்வண்டியிலிருந்து தள்ளி விடுகிறார்கள், கழுத்தை அறுத்து விடுகிறார்கள் அந்தப் பெண்ணை மாணவர்கள் செய்து விடுகிறார்கள் ஆசிட் அடிக்கிறார்கள். ஆனால் அப்படி எல்லாம் நடந்து கொள்ளாமல் அவர்கள் எங்கே இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்க வேண்டும். மேலும் அவர்களை மதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.