fbpx

முன்னாள் CM எடியூரப்பா மீது பாலியல் வழக்கு..!! சிறுமியை பலாத்காரம் செய்ததாக தாய் பரபரப்பு புகார்..!!

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பிஎஸ் எடியூரப்பா (வயது 81) 17 வயது சிறுமியின் தாயார் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன் அடிப்படையில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம், 2012 (போக்சோ) கீழ் பெங்களூரு காவல்துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

POCSO பிரிவு 8 (பாலியல் வன்கொடுமை) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354 A (எந்தப் பெண்ணையும் தாக்குதல் அல்லது குற்றவியல் சக்தியைப் பயன்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, பிப்ரவரி 2 ஆம் தேதி சிறுமி மற்றும் அவரது தாயார் உதவி கோரி எடியூரப்பாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி ஒரு அறையில் வைத்து எடியூரப்பா பாலியல் பலாத்காரம் செய்ததாக தாயார் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ஊழியர்களுக்கு Work From Home..!! மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு..!! தண்ணீரின்றி அவதிப்படும் பெங்களூரு..!!

Chella

Next Post

Shocking Report | அந்த கொடூர சம்பவத்திற்கு பிறகு இப்படியா..? பாகிஸ்தானிடம் நன்கொடை பெற்ற கட்சிகள்..!!

Fri Mar 15 , 2024
தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள நன்கொடை விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதல் நடந்த சில வாரத்தில் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனத்திடம் இருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. மேலும், […]

You May Like