fbpx

இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம் …. முன்னாள் கணவரை கொன்ற ஆட்டோ ஓட்டுனர் …

ஏற்கனவே திருமணமான பெண் , இன்ஸ்டாகிராமில் பேசி பழகி, மற்றொரு இளைஞரை திருமணம் செய்ததால் வந்த தகராறில் 2-வது கணவர் முதல் கணவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் அருகே தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வந்தவர் சக்தி வேல் (32) . இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார்.  இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். சந்தேகத்தின்பேரில் அதே பகுதியை சேர்ந்த சுமன் என்ற ஆட்டோ ஓட்டுனரை  சந்தேகத்தின் பேரில் போலீசார் இந்த வழக்கில் விசாரணை நடத்தினர்.

தட்டாஞ்சாவடியை சேர்ந்த பூமிகா. இவருக்கு திருமணம் ஆகி குழந்தை உள்ளது. செல்போனில் அதிக நரம் செலவிட்ட வந்தார். சமூக வலைத்தலங்களில் எப்போதும் ஆன்லைனில் இருப்பார். தன்னுடைய போட்டோக்களை வாட்சப் , ஃபேஸ்புக்கில் வெளியிட்டு வந்தார். எனவே ஏராளமானோர் ஃபாலோ செய்தனர். எந்நேரமும் போனில் இருந்ததால் கணவருக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சுமன் நட்பாக பழகி வந்துள்ளார்.

 இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு நேரில் சந்தித்து வந்தனர். இந்நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பலருடனும் நட்பாக பேசிக் கொண்டிருப்பது சுமனுக்கு அப்போதுதான் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்தார். அப்போதுதான் ஓட்டுனர் சக்திவேலையும் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

சக்திவேலை நேரில் சந்தித்து இனி பூமிகா விசயத்தில் தலையிட வேண்டாம் என எச்சரித்துள்ளார். இதனால் சுமன் மற்றும் அவரது நண்பர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே நண்பர்களோடு சேர்ந்து சக்திவேலை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இக்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Post

ஒவ்வொரு நாளும் ரூ.50 முதலீடு செய்தால் போதும்.. ரூ.35 லட்சம் திரும்ப பெறலாம்...

Tue Sep 13 , 2022
எதிர்காலத்திற்காக முதலீடு செய்வதும் உங்களைப் பாதுகாத்துக் கொள்வதும் காலத்தின் தேவையாக உள்ளது. எந்தவொரு முதலீட்டு விருப்பத்தையும் தேர்ந்தெடுப்பதில் சிறந்த வருவாயைப் பெறுவது முக்கிய அம்சமாக இருக்கும் அதே வேளையில், அதிக நிலையற்ற காலங்களில் பாதுகாப்பான முதலீட்டு சவால்கள் விருப்பமான விருப்பமாக மாறும். பாதுகாப்பான மற்றும் சிறந்த வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் அத்தகைய திட்டங்களில் ஒன்று அஞ்சல் அலுவலக கிராம சுரக்ஷா திட்டம் ஆகும். ஒரு நாளைக்கு ரூ. 50 அல்லது […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!! சம்பள உயர்வு குறித்து வெளியான ஹேப்பி நியூஸ்..!!

You May Like