fbpx

முன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் இருந்து வீசிய துர்நாற்றம்; உள்ளே சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..

மதுரை மாநகர் சர்வேயர்காலனி அருகே உள்ள ஆவின் நகரை சேர்ந்தவர் 41 வயதான ரமேஷ். முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு, 36 வயதான விசாலினி என்ற மனைவியும், 12 வயதான ரமிஷா ஜாஸ்பல் என்ற மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக, ரமேஷ் ரியல் எஸ்டேட் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு நாட்களாக, ரமேஷின் வீடு திறக்கப்படவில்லை. மேலும், இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து திருப்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து பார்த்த போது ரமேஷ், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் சடலமாக கிடந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், முதற்கட்ட விசாரணையில், ரமேஷ் செய்து வந்த ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

Maha

Next Post

பெற்றோர்களே கவனம்!!! அங்கன்வாடியில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தை உயிரிழப்பு..

Thu Sep 28 , 2023
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கபின். இவரது மனைவி ஏஞ்சலின் ருபீஸியா. இவர்களுக்கு சுஜன் என்ற நான்கு மாதக் குழந்தை உள்ளது. இந்நிலையில், முத்தாண்டிபாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நேற்று குழந்தை சுஜனுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை, குழந்தை சுஜன் எந்த அசைவும் இல்லாமல் இருந்துள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், குழந்தையை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர். அங்கு குழந்தையை […]

You May Like