மத்திய ஆயுத காவல்படையில் காவலர், ரைப்பிள்ஸ் உள்ளிட்ட பணிகளுக்கு இன்று முதல் தேர்வு நடைபெற உள்ளது.
மத்திய ஆயுத காவல்படையில் காவலர் (ஜிடி), அசாம் ரைபிள்ஸ் படையில் எஸ்எஸ் எஃப் மற்றும் ரைப்பிள்ஸ் (ஜிடி) தேர்வு, 2024-வை கணினி அடிப்படையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. தென் மண்டலத்தில் 3,15,599பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னை, கோயம்பத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், ஆந்திர பிரதேசத்தில் குண்டூர், கர்னூல், ராஜமுந்திரி, திருப்பதி, விசாகப்பட்டினம், விஜயவாடா, காக்கிநாடா, நெல்லூர், சிராலா, விழிநகரம் மற்றும் தெலங்கானாவில் ஐதராபாத், வாரங்கல், கரீம்நகர் ஆகிய 20 நகரங்களில் 23 இடங்களில் இந்தத் தேர்வு நடைபெறும்.
தென் மண்டலத்தில் இன்று முதல் 07.03.2024 வரை 13 நாட்களுக்கு தேர்வு நடைபெறும். இந்த நாட்களில் காலை 9:00 மணி முதல் 10:00 மணி வரை, முற்பகல் 11.30 முதல் மதியம் 12:30 மணி வரை, மதியம் 2:30 மணி முதல் 3.30 மணி வரை, மாலை 5:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும் 4 ஷிப்டுகளாக தேர்வு நடைபெறும். இதற்கான மின்னணு அனுமதி சான்றிதழை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் தேர்வு தொடங்குவதற்கு 4 நாட்கள் முன்பிருந்து விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு சம்பந்தமான தகவல்கள் அனைத்தும் அவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டு வருகின்றன. மின்னணு அனுமதி சான்றிதழ் மற்றும் அசல் தகுதிச் சான்றை விண்ணப்பதாரர்கள் தேர்விற்கு கட்டாயம் எடுத்து வர வேண்டும். கூடுதல் தகவல்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 044-2825 1139, 9445195946 ஆகிய தென் மண்டல அலுவலகத்தின் உதவி எண்களை விண்ணப்பதாரர்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.