fbpx

Exam: 12-ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு…! இன்று முதல் மே 22-ம் தேதி வரை தேர்வு…!

தேசிய திறந்தநிலைப் பள்ளித் தேர்வுகள் இன்று தொடங்குகிறது.

என்ஐஓஎஸ் எனப்படும் தேசிய திறந்த நிலைப்பள்ளியானது, பள்ளிக்கூடங்களுக்குச் செல்லாதவர்கள் அதற்கு இணையான கல்வியைப் பெற உதவுகிறது. செகண்டரி எனப்படும் பத்தாம் வகுப்புக்கு இணையான கல்வியையும், சீனியர் செகண்டரி எனப்படும் 12-ம் வகுப்புக்கு இணையான கல்வியையும், தேசிய திறந்தநிலைப் பள்ளி வழங்குகிறது.

ஏப்ரல், மே மற்றும் அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் ஆண்டுக்கு இருமுறை இதற்கான தேர்வுகள் நடத்தி சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதத் தேர்வு தேதிகள் பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இன்று தொடங்கும் செகண்டரி மற்றும் சீனியர் செகண்டரி தேர்வுகள் மே 22-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை http://sdmis.nios.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள் 7 வாரங்களுக்குப் பின்னர் வெளியிடப்படும் என தேசிய திறந்தநிலைப் பள்ளியின் மண்டல இயக்குநர் சந்தானம் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

Election: 2019-ல் 11 மாநிலத்தில் வாக்கு சதவீத எண்ணிக்கை குறைவு...!

Sat Apr 6 , 2024
2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் குறைந்த அளவு வாக்குகள் பதிவான தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளுடனான மாநாட்டை தேர்தல் ஆணையம் டெல்லியில் உள்ள தனது அலுவலகத்தில் நடத்தியது. பீகார், உத்தரப்பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா, உத்தராகண்ட், தெலங்கானா, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட் ஆகிய 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் […]

You May Like