நாம் ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்கும் தொகையில், குறிப்பிட்ட தொகை நமது பிஎப் கணக்கிற்கு செல்லும். நிறுவனத்திடம் இருந்தும், நம்மிடம் இருந்தும் குறிப்பிட்ட தொகை மாதந்தோறும் நம்முடைய பிஎப் கணக்கில் சேரும். இந்த பிஎப் கணக்கில் சேரும் பணத்திற்கு வட்டியும் வழங்கப்படும். தேவைப்படும் பட்சத்தில் இடைப்பட்ட நேரத்தில் கூட இந்த தொகையை எடுத்துக்கொள்ள முடியும். பிஎப் போக ரிட்டயர்மெண்ட் தொகையும் இதேபோல் வழங்கப்படும். ஆனால், அதை குறிப்பிட்ட வயதிற்கே பின்பே எடுக்க முடியும்.
இந்நிலையில்தான் இனி ஆதார் அட்டையை பிறப்பு சான்றிதழ் ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று இபிஎப்ஓ அறிவித்துள்ளது. அதன்படி, இனி பிறப்பு ஆவணங்களுக்கு ஆதார் அட்டையை கொடுக்கக் கூடாது என்றும் அதை கொடுத்துள்ளவர்கள் உடனே பிறப்பு சான்றிதழை வழங்க வேண்டும் என்றும் பிறப்பு சான்றிதழ் மட்டுமே பிறப்பு சான்றாக ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் இபிஎப்ஓ அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.