உலகமே எதிர்பார்த்து காத்திருந்த ஜி-20 மாநாடு டெல்லியில் கோலாகலமாக தொடங்கியது. இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதற்காக டெல்லியில் 1.30 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மாநாட்டின் துவக்கத்தில் பிரதமர் மோடி, ஜி 20 அமைப்பில் ஆப்ரிக்க யூனியனை சேர்க்க அழைப்பு விடுத்தார், அதனைத்தொடர்ந்து ஜி 20 கூட்டமைப்பில் உறுப்பு நாடாக ஆப்ரிக்க யூனியன் இணைந்தது. பிறகு பேசிய பிரதமர் மோடி, வளமான எதிர்காலத்திற்க்காக ஜி 20 நாடுகள் இணைந்து செயல்படுவது அவசியம் என்று கூறினார். மேலும் ஜி 20 மாட்டில் பங்கேற்ற தலைவர்கள் முன் அவர்களின் நாட்டின் பெயர்ப்பலகை வைக்கப்பட்டிருந்தது ஆனால் பிரதமர் மோடி அமர்ந்திருந்த இருக்கை முன் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் “பாரத்” என்று இருந்தது.
ஏற்கனவே ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு டின்னர் விருந்து வழங்க உள்ளார். இதற்கான அழைப்பிதழில் பாரத் என்று குறிப்பிட்டிருந்தது சர்ச்சையி ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜி 20 மாநாட்டால் பிரதமர் மோடியின் அமர்ந்திருந்த இருக்கை முன் இந்திய என்பதற்கு பதில் பாரத் என்ற பெயர் பலகை இருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.