fbpx

மூளையில் ரத்தக்கசிவு..! ஜக்கி வாசுதேவ் மருத்துவமனையில் அனுமதி..!

கடந்த மார்ச் 17 ஆம் தேதி, ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் திடீர் ரத்தக்கசிவு ஏற்பட்டதன் காரணமாக, டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சத்குரு கடந்த சில நாட்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த 17ம் தேதி அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டதோடு, அவரது உடல்நிலையும் பாதிக்கப்பட்டு, கடுமையான வாந்தி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்து பார்த்த போது, அவரது மூளையில் இரத்தப்போக்குடன் ஒரு முக்கியமான வீக்கம் இருப்பது தெரியவந்தது.

அதனையடுத்து டாக்டர் வினித் சூரி, டாக்டர் பிரணவ் குமார், டாக்டர் சுதீர் தியாகி மற்றும் டாக்டர் எஸ் சட்டர்ஜி ஆகியோர் அடங்கிய டாக்டர்கள் குழு அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்தது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு, சத்குரு வென்டிலேட்டரில் இருந்தார்,வெளியேற்றப்பட்டார், தற்போது அவருக்கு வென்டிலேட்டர் அகற்றப்பட்டுள்ளதாகவும், அவர் விரைவாக குணமடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து அவரது மூளை, உடல் மற்றும் முக்கிய அளவுருக்கள் நிலையான முன்னேற்றத்தைக் காட்டுகின்றதாகவும், அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜாக்கி வாசுதேவ் மருத்துவமனையில் இருந்து விரைவில் குணமடைந்து வருமாறு பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Kathir

Next Post

3வது மாடி எஸ்கலேட்டரில் ஏறும்போது, தந்தை கையில் இருந்து தவறி விழுந்த ஒரு வயது குழந்தை…! நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி.!

Wed Mar 20 , 2024
சத்தீஸ்கர் மாநில தலைநகரான ராய்ப்பூரில் அமைந்துள்ள ஷாப்பிங் மாலின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள எஸ்கலேட்டரில் ஏறும் போது தந்தையின் கையில் இருந்து கீழே விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அமைந்துள்ள ஷாப்பிங் மாலுக்கு ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்று இருக்கிறார். அப்போது ஷாப்பிங் மாலின் மூன்றாவது தளத்தில் உள்ள எஸ்கலேட்டரில் குடும்பத்துடன் ஏற முயன்றுள்ளனர். […]

You May Like