fbpx

கீழச்சேரியில் பரபரப்பு.. பிளஸ் டூ மாணவி சரளாவின் மரணம் குறித்து புதிய தகவல்..!

பத்து நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவி ஸ்ரீமதியின் மரணத்தின் சுவடு மக்கள் மனதில் இருந்து மறைவதற்குள், திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் ஒரு பள்ளி மாணவி விடுதியில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் அருகில் உள்ள கீழச்சேரி ஊராட்சியில் தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த மாணவி, கீழச்சேரியில் செயல்படும் ஒரு அரசு உதவிபெறும் பள்ளி ஹாஸ்டலில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்துவந்தார். இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவி, அவருடன் படிக்கும் மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். பிறகு அந்த மாணவர்கள் காலை உணவு சாப்பிட சென்ற நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது பற்றி பள்ளி நிர்வாகம் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறி மாணவியின் உறவினர்கள் கீழச்சேரி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவி சரளாவின் இறப்புக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. மாணவி விஷ பூச்சி கடித்து இறந்திருக்கலாம் என சந்தேகப்படுகின்றனர். இதுபற்றி காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி தற்கொலை வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

மப்பேடு போலிஸார் மற்றும் மாவட்டக் காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதால் கீழச்சேரி பகுதி பெரும் பரபரப்பாக காணப்படுகிறது
மாணவி சரளா, விவசாயி பூசனம், முருகம்மாள் தம்பதியின் ஒரே மகள். மகளின் உடலை பார்த்த அவர்கள் அலறி துடித்தது அழுதது அனைவரையும் கண் கலங்க வைத்தது. மகளின் சாவில் உள்ள மர்மத்தை வெளியில் கொண்டு வர வேண்டும் என்றும், மாணவி இறப்புக்கு காரணமானவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Rupa

Next Post

கூகுள் இணை நிறுவனரின் மனைவியுடன் கள்ள உறவா..? எலான் மஸ்க் அளித்த பதில்..

Mon Jul 25 , 2022
கூகுள் இணை நிறுவனரான செர்ஜி பிரினின் மனைவி நிக்கோல் ஷானஹானுடன் உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.. இதனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் செர்ஜி பிரின் தனது மனைவியை விவாகரத்து செய்ததாகவும், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) வெளியிட்டிருந்தது.. எலான் மஸ்க் மற்றும் செர்ஜி பிரின் நெருங்கிய நண்பர்கள் என்றும், எனினும் செர்ஜியின் மனைவியுடன் எலான் மஸ்க் தொடர்பு […]

You May Like