fbpx

பரபரப்பு..! கைது செய்யப்படுவாரா சீமான்..! ஊட்டிக்கு விரைந்தது தனிப்படை..!

‘பிரண்ட்ஸ்’ பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்கள் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக கடந்த 2011-ம் ஆண்டு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன் பிறகு இருவரும் பேசும் விடீயோக்கள் சமூக வலைதளங்களில் உலா வந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி, சீமான் மீது நடவடிக்கை எடுக்கும் படியும், நிறுத்தி வைத்த வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் நடிகை விஜயலட்சுமி. அதனைத்தொடர்ந்து விஜயலட்சுமியிடம் விசாரணை நடைபெற்றது, இதில் பல தகவல்களை போலீசார் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திருவள்ளூர் மாவட்ட மகிளா கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பவித்ரா முன்பு நடிகை விஜயலட்சுமி ஆஜர் படுத்தப்பட்டு வாக்குமூலம் அளித்துள்ளார் என தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து நேற்றைய தினம், ஊட்டியில் இருந்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சரமாரியாக குற்றஞ்சாட்டினார். நடிகை விஜயலட்சுமி என் மீது குற்றம் சாட்டியது போலவே, பிரபல கன்னட நடிகர் உட்பட பலர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். அதற்கான வீடியோவை பாருங்கள். என்னுடைய வளர்ச்சியை தாங்க முடியாமல், கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் பெண்களை வைத்து அரசியல் கட்சிகள் அவதூறு பரப்புகின்றன என்று கூறினார்.

இப்படி பரப்பராக இந்த விவிரம் சென்று கொண்டிருக்கும் நிலையில் நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் விசாரணை நடத்த 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் ஊட்டி சென்றுள்ளது. சீமான் தற்போது ஊட்டியில் இருப்பதால் அங்கு சென்று அவரிடம் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சீமான் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Kathir

Next Post

பெற்றோர்களே!… குழந்தைகளின் தூக்கத்தை கவனியுங்கள்!… இந்தமாதிரி மாற்றங்கள் ஏற்படுகிறதா?

Sun Sep 3 , 2023
குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் மட்டுமின்றி, குழந்தைகள் நடந்து கொள்ளும் விதத்தை தீர்மானிப்பதில், தூக்கம் ஒரு முக்கிய காரணியாக விளங்குவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் உள்ள இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், 9 முதல் 10 வயதுக்குட்பட்ட 11,858 குழந்தைகளின் தரவுகளை பயன்படுத்தி தூக்கமின்மை, தூங்குவதற்கு எடுக்கும் நேரத்தின் அளவு, கிளர்ச்சியான நடத்தைக்கான தொடர்பு குறித்து ஆராய்ந்தனர். இதில் தூக்கத்திற்கும், மனக்கிளர்ச்சியான நடத்தைகளுக்கும் […]

You May Like