Poonch Attack: கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் உள்ள தீவிரவாதிகளை பற்றிய தகவல்களை இந்தியா டுடே பத்திரிகை வெளியிட்டுள்ளது.
இந்தப் கொடூர தாக்குதலில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த உயர் அதிகாரியான விக்கி பஹடே கொல்லப்பட்ட நிலையில் 4 பேர் காயமடைந்தனர். தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இல்லியாஸ் (முன்னாள் பாக் இராணுவ கமாண்டோ), அபு ஹம்சா (லஷ்கர் தளபதி) மற்றும் ஹாத்தூன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் இலியாஸ் பௌஜி என்ற பெயரால் அழைக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்திருக்கிறது. இந்த மூன்று பேரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் துணை அமைப்பான மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி (பிஏஎஃப்எஃப்) அமைப்பிற்காக தீவிரவாத தாக்குதலை நடத்தி இருப்பதும் தெரிய வந்தது
ரஜோரி மற்றும் பூஞ்ச் காடுகளில் தீவிரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தை திறமான நபர்களை குறித்து விசாரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. கூடிய விரைவிலேயே தாக்குதலில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகளும் கைது செய்யப்படுவார்கள் என ராணுவம் தெரிவித்துள்ளது.
PAFF என்பது ஜெய்ஷ் ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழுவாகும், இது கடந்த ஆண்டு டிசம்பரில் பூஞ்ச் நகரில் ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
மே 4-ம் தேதி பூஞ்ச்(Poonch Attack) மாவட்டத்தில் உள்ள ஷாசிதார் அருகே இந்திய விமானப் படையைச் சேர்ந்த 5 வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் காயம் காரணமாக இந்திய விமானப்படை அதிகாரி உயிர் இழந்தார்.