fbpx

கேப்டன் விஜயகாந்த் தலைமையில் வரும் 14ஆம் தேதி செயற்குழு, பொதுக்குழு கூட்டம்..!! வெளியான அறிவிப்பு..!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் வரும் 14ஆம் தேதி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 18ஆம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, விஜயகாந்தின் நெஞ்சு பகுதியில் உள்ள சளியை அகற்றுவதற்கான சிகிச்சைகள் நடைபெற்றது. அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக மருத்துவமனை சார்பில் அவ்வப்போது அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தது. அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வந்தனர்.

இந்த சூழல், விஜயகாந்த் குணமடைந்து வீடு திரும்பியதாக மியாட் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தது. இந்நிலையில், வரும் 14ஆம் தேதி வியாழக்கிழமை தேமுதிக நிர்வாகிகள் கூட்டத்தில் கேப்டன் விஜயகாந்த் பங்கேற்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில், வரும் 14ஆம் தேதி காலை 8.45 மணிக்கு செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் புதிதாக கார் வாங்க தடை!… முதல்வரின் அதிரடி உத்தரவு!

Mon Dec 11 , 2023
அரசு ஊழியர்கள் தங்கள் வருகையை பதிவு செய்ய இனி அரசு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் முறை கட்டாயப்படுத்தப்படும். அமைச்சர்களாக பதவியேற்றவர்கள் அரசு பணத்தில் புதிய கார்களை வாங்காமல் ஏற்கனவே அமைச்சர்கள் பயன்படுத்திய பழைய கார்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று மிசோரம் முதல்வர் லால்டு ஹோமா உத்தரவிட்டுள்ளார். மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் நவம்பர் 7-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி […]

You May Like