ஜே.இ.இ தேர்வில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண்களை தமிழக மாணவர்கள் பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. கொரோனா பரவிய காலகட்டத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து தேசிய தேர்வு முகமையிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது.
இந்நிலையில் தற்போது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை கோரிக்கையை ஏற்று தேசிய தேர்வு முகமை ஜே.இ.இ தேர்வில் விளக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தேர்ச்சி ஆண்டு, கல்வி வாரியத்தை குறிப்பிட வேண்டிய பிரிவு நீக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு, 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாடு மாணவர்களுக்காக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்பு மதிப்பெண் பதிவு செய்வது அவசியம் என இருந்த நிலையில், தற்போது தளர்வு அளிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் இந்த தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பித்து தேர்வு கட்டணம் செலுத்தியுள்ள 2021 மாணவர்களுக்கு, தேர்ச்சி ஆண்டு, கல்வி மதிப்பெண் உள்ளிட்டவை குறிப்பிட வேண்டிய பிரிவு நீக்கிவிடப்படும். மேலும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் தடங்கல் நேரிட்டால் 011-4075900/011-69227700, email at jeemain@nta.ac.in தொடர்புக்கொள்ளவும்.