fbpx

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது உறுதி..! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் முடிவில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “1982ஆம் ஆண்டு திருமங்கலத்தில் அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டது. தற்போது 300 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 7 ஏக்கர் பரப்பளவில் இந்த கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரி மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் தங்களுக்கு கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது ஆய்வு செய்ய வந்துள்ளேன். இங்கு ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிட வளாகம் கட்டப்படும்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது உறுதி..! - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்தப் பணிகள் நிறைவடைய இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பதால், அதுவரை இந்த கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் அருகே உள்ள விருதுநகர் மற்றும் திண்டுக்கல் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இடம் கேட்க இந்திய மருத்துவ கவுன்சிலர் ஆணையாளரை அனுமதி பெறும்படி வலியுறுத்தியுள்ளேன். மேலும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் முடிவில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் சில கேள்விகள் கேட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு கிடையாது”. இவ்வாறு அவர் கூறினார்.

Chella

Next Post

அமெரிக்காவில் குடிபெயர கோத்தபய ராஜபக்சே திட்டம்..? கிரீன் கார்டுக்கு விண்ணப்பிப்பு..?

Fri Aug 19 , 2022
இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவில் குடியேற திட்டமிட்டு கிரீன் கார்டு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். உணவு, மருந்துப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியதை அடுத்து, கோபமடைந்த இலங்கை மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர் தனது அதிபர் பதவியை […]
அமெரிக்காவில் குடிபெயர கோத்தபய ராஜபக்சே திட்டம்..? கிரீன் கார்டுக்கு விண்ணப்பிப்பு..?

You May Like